300 கிமீ ரேஞ்சு.., மஹிந்திரா எக்ஸ்யூவி 300 எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் அறிமுக விபரம்

0

xuv300

300 கிலோ மீட்டர் வரம்பினை வழங்கவல்ல மஹிந்திரா எலக்ட்ரிக் பிரிவின் எக்ஸ்யூவி 300 காரை முதன்முறையாக ஆட்டோ எக்ஸ்போ 2020 அரங்கில் காட்சிக்கு கொண்டு வரவுள்ளது. 2021 ஆம் ஆண்டின் தொடக்க மாதங்களில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

Google News

நாட்டின் முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளராக விளங்கி வரும் மஹிந்திரா, eKUV100, எலக்ட்ரிக் XUV300 மற்றும் ஃபோர்டின் ஆஸ்பயர் செடான் அடிப்படையிலான மின்சார கார் என மூன்று மாடல்கள் உட்பட பிரீமியம் எலக்ட்ரிக் கார்களை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்க உள்ள நிலையில், ரூ.9 லட்சத்தில் எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலாக இ கேயூவி 100  விற்பனைக்கு வரவுள்ளது. இந்த மாடல் அதிகபட்சமாக 150 கிமீ ரேஞ்சை வழங்கவல்லதாக இருக்கலாம்.

எக்ஸ்யூவி 300 இ.வி மாடலில் 40 கிலோவாட் பேட்டரி பேக் கொண்டதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 300 கிமீ வரை வரம்பை வழங்கக்கூடும். காம்பாக்ட் எஸ்யூவிக்கு மின்சார மோட்டார் சுமார் 130 ஹெச்பி உற்பத்தி செய்யும்.

இந்திய வாகன உற்பத்தியாளர் எலக்ட்ரிக் எக்ஸ்யூவி 300 இரண்டு பேட்டரி பேக்குகளை வழங்க வாய்ப்புள்ளது. இது ஏசி மற்றும் டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் திறன்களை ஆதரிக்கும் என்பதனால் அமோக வரவேற்பினை தனிநபர் மத்தியிலும் பெறக்கூடும்.

ரூ.15 லட்சத்தில் எதிர்பார்க்கப்படுகின்ற மஹிந்திரா எக்ஸ்யூவி 300 எலக்ட்ரிக் எஸ்யூவி காரானது. விரைவில், விற்பனைக்கு வெளியாக உள்ள டாடா நெக்ஸான் இ.வி காருக்கு போட்டியாக அமையக்கூடும்.