ஃப்யூச்சரோ-இ உட்பட 17 கார்களை வெளியிடும் மாருதி சுசுகி – ஆட்டோ எக்ஸ்போ 2020

மாருதி ஃப்யூச்சரோ இ

2020 ஆட்டோ எக்ஸ்போவில் மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய ஃப்யூச்சரோ-இ (Futuro-e) கான்செப்ட் உட்பட விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட், மாருதி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் உட்பட 17 கார்களை தனது அரங்கில் நாட்டின் முதன்மையான கார் தயாரிப்பாளர் காட்சிப்படுத்த உள்ளது.

சமீபத்தில் டீசர் வெளியிடப்பட்டிருந்த ஃப்யூச்சரோ இ கான்செப்ட் மாடல் கூபே ரக ஸ்டைல் பெற்ற எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலாக வெளியிடப்படும் என தெரிகின்றது. அனேகமாக இந்த மாடல் மாருதியின் எதிர்கால கார்களின் நுட்ப்களை பெற்றதாக விளங்கும். வரும் காலங்களில் மாருதி தனது கார்களை பொறுத்தவரை ஹைபிரிட் ஆப்ஷன் மற்றும் எலெக்ட்ரிக் வெர்ஷனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க உள்ளது. மேலும் இந்நிறுவனம் சுசுகி ஜிம்னி எஸ்யூவி காரும் இந்த அரங்கில் காட்சிக்கு கொண்டு வரவுள்ளது.

மாருதி சுசுகி தற்போது இந்திய சந்தைக்கான பட்ஜெட் மின்சாரத்தில் இயங்கும் கார்களை உருவாக்குவதில் பணியாற்றி வருகிறது. தற்போதைய தலைமுறை வேகன் ஆர் அடிப்படையில் சோதனை செய்யப்பட்டு வருகின்றது. மாருதி சுசுகி ஃபியூச்சுரோ-இ காரின் உற்பத்தி நிலை மாடல் மின்சார வேகன் ஆருக்கு மேலே நிலை நிறுத்தப்படலாம்.

Futuro-e maruti suzuki