Automobile Tamil

350 கிமீ ரேஞ்சு.., ரெனால்ட் ஸோயி EV இந்தியா வருகை – ஆட்டோ எக்ஸ்போ 2020

Renault zoe ev

வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள 2020 ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் ரெனால்ட் நிறுவனம் ஸோயி EV (Zoe EV) காரை இந்திய சந்தையில் காட்சிப்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல் கசிந்துள்ளது. ஸோயி கார் சிங்கிள் சார்ஜில் 300 கிமீ முதல் 350 கிமீ ரேஞ்சை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியாவில் குறைந்த ரேஞ்சு பெற்ற டிகோர், வெரிட்டோ போன்ற கார்களுடன் ஹூண்டாய் கோனா, வரவுள்ள எம்ஜி இசட்.எஸ் இ.வி. மற்றும் டாடா நெக்ஸான் EV போன்ற கார்கள் எலெக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகமாகி உள்ள நிலையில், அடுத்தடுத்து புதிய மின்சார கார்களை ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் வெளியிட உள்ளனர்.

நமது நாட்டின் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றி வடிவமைக்கப்பட உள்ள இந்த எலெக்ட்ரிக் காரில் 90 ஹெச்பி பவரை வழங்கும் எலெக்ட்ரிக் மோட்டார் பயன்படுத்தப்பட்டு 41kWh பேட்டரி கொண்டு இயக்கப்படலாம். ஒர முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 300-350 கிமீ ரேஞ்சை வெளிப்படுத்தலாம் என எதிர்பார்க்கபடுகின்றது. குறிப்பாக இந்நிறுவனம் சர்வதேச அளவில் ஸோயி உட்பட பல்வேறு எலக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து வருகின்றது. சீன சந்தையில் காட்சிப்படுத்தப்பட்ட ரெனால்ட் க்விட் அடிப்படையிலான எலக்ட்ரிக் காரை இந்தியா கொண்டு வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது.

ஹேட்ச்பேக் ரக காரான ரெனால்ட் ஸோயி EV விலை ரூ. 15 லட்சத்தில் தொடங்கலாம். 2020 ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் ரெனால்ட் நிறுவனம் 4 மீட்டருக்கு குறைந்த நீளம் பெற்ற எஸ்யூவி கான்செப்ட்டை வெளியிட உள்ளது. இதுதவிர, ட்ரைபர் ஏஎம்டி மற்றும் ட்ரைபர் டர்போ பெட்ரோல் வேரியண்டுகளை வெளிப்படுத்த உள்ளது.

உதவி – Autocar India

Exit mobile version