Automobile Tamil

ஆட்டோ எக்ஸ்போ 2020: டாடா HBX கான்செப்ட் (H2X) மைக்ரோ எஸ்யூவி வெளியானது

tata hbx concept

நெக்ஸான் எஸ்யூவி காரின் கீழ் நிலை நிறுத்தப்பட உள்ள டாடா HBX கான்செப்ட் (H2X) மைக்ரோ எஸ்யூவி காரின் உற்பத்தி நிலை மாடலாக ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வந்துள்ளது. இந்த மாடல் விற்பனையில் உள்ள இக்னிஸ், கேயூவி100, மாருதி எஸ்-பிரெஸ்ஸோ உள்ளிட்ட கார்களுடன் போட்டியை ஏற்படுத்திக் கொள்ள உள்ளது.

2019 ஜெனிவா மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்ட ஹெச்2எக்ஸ் அல்லது ஹார்ன்பில் என அழைக்கப்படுகின்ற மாடலின் உற்பத்தி நிலையாக ஹெச்பிஎக்ஸ் விளங்குகின்றது. அல்ட்ராஸ் காரை தொடர்ந்து ஆல்ஃபா பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட உள்ள இரண்டாவது காராகும். இந்த காரின் தோற்ற அமைப்பு மிகவும் கம்பீரமாகவும், காட்சிப்படுத்தப்பட்டுள்ள மாடல் பல்வேறு கஸ்டமைஸ் அம்சங்களை பெற்றதாக உள்ளது.

இரு பிரிவுகளை பெற்ற எல்இடி ஹெட்லைட் மற்றும் எல்இடி ரன்னிங் விளக்குகள், மிக நேர்த்தியான பம்பர் அமைப்பு, பக்கவாட்டில் சி பில்லரில் அமைந்துள்ள பின்புற கதவு கைப்பிடிகளை கொண்டுள்ளது. இன்டிரியரை பொறுத்தவரை ஃபிரீ ஸ்டாண்டிங் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் பல்வேறு நவீனத்துவமான ஆண்ட்ராய்டி ஆட்டோ, ஆப்பிள் கார் ப்ளே வசதிகள் உள்ளன.

இந்த காரில் 86 ஹெச்பி பவரை வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படலாம். இதில் 5 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றிருக்கும். டீசல் என்ஜின் வருகை குறித்து உறுதியான தகவல் இல்லை.

மேலும், இந்த கார் விற்பனைக்கு நடப்பு ஆண்டின் மத்தியில் எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் அடிப்படையிலான ஹார்ன்பில் எலெக்ட்ரிக் மாடல் அடுத்த ஆண்டின் இறதியில் வெளியாகலாம்.

Exit mobile version