டொயோட்டா ஆல்பார்டு சொகுசு வேன் அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2018

0

toyota alphard frontடெல்லியில் நடைபெற்று வரும் ஆட்டோ எக்ஸ்போ 2018 வாகன கண்காட்சியில் டொயோட்டா இந்தியா நிறுவனம், சொகுசுக்கு பெயர் பெற்ற டொயோட்டா ஆல்பார்டு எம்பிவி காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் நோக்கில் டொயோட்டா இந்தியா காட்சிப்படுத்தியுள்ளது.

டொயோட்டா ஆல்பார்டு

toyota alphard side

Google News

ஜப்பான் உட்பட பல்வேறு வெளிநாடு சந்தைகளில் பிரசத்தி பெற்ற மாடலாக விளங்கும் ஆல்பார்ட் சொகுசு சார்ந்த அம்சங்களில் சிறப்பான மாடலாக வலம் வருவதுடன், சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தாத வகையில் ஹைபிரிட் வசதியை பெற்ற மாடலாக விளங்குகின்றது.

மிகவும் கம்பீரமாக காட்சியளிக்கின்ற இந்த எம்பிவி ரக மாடல் நேர்த்தியான முகப்பு கிரிலுடன், பக்கவாட்டில் ஸ்லைடிங் தன்மை கொண்ட கதவுகளுடன் கட்டைமைக்கப்பட்ட மிக உறுதியான பாதுகாப்பு தரத்தை கொண்ட மாடலாக விளங்குகின்றது.

6 மற்றும் 8 இருக்கை ஆப்ஷன்களில் தாரளமான இடவசதி மற்றும் சிறப்பான பல நவீன வசதிகளை பெற்றுள்ள ஆல்பார்ட் காரின் நீளம் 4,945 மில்லிமீட்டர் , 1,850 மில்லிமீட்டர் அகலமும் 1,895 மில்லிமீட்டர் உயரத்துடன் 3,000 மில்லிமீட்டர் வரையிலான வீல்பேஸ் பெற்றுள்ளது.

toyota alphard headlight

சர்வதேச அளவில் ஹைபிரிட் பவர்ட்ரெயின் கொண்டதாக விற்பனை செய்யப்படுகின்ற ஆல்ஃபார்டு காரில் 2AR-FXE 2.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 152 PS பவர் மற்றும் 206 Nm டார்க் வெளிப்படுத்துவதுடன், இதனுடன் இணைந்த 2JM முன்புற எலக்ட்ரிக் மோட்டார் 143 PS பவர் மற்றும் 270 Nm டார்க் வழங்குவதுடன், 2FM பின்புற எலக்ட்ரிக் மோட்டார் 68 PS பவர் மற்றும் 143 Nm டார்க் வழங்கும்.இதில் சிவிடி ஆட்டோ கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

இதைத்தவிர ஆல்ஃபார்ட் காரில் 3.5 லிட்டர் எஞ்சின் தேர்வுகளிலும் விற்பனைக்கு வரக்கூடும் என்பதனால் விலை ரூ.50 லட்சத்தில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

toyota alphard tail light