500 கிமீ ரேஞ்சு.., ஃபோக்ஸ்வாகன் I.D.Crozz மின்சார் கார் வெளியானது – ஆட்டோ எக்ஸ்போ 2020

0

 volkswagen id crozz

ஃபோக்ஸ்வாகன் குழுமத்தின் இந்திய 2.0 திட்டத்தின்படி எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு கொண்டு வரவுள்ள நிலையில் ஃபோக்ஸ்வாகன் I.D.Crozz முதன்முறையாக இந்தியாவில் ஆட்டோ எக்ஸ்போ மூலம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

Google News

சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 500 கிமீ தொலைவு பயணிக்கும் வரம்புடன் வரவுள்ள ஐடி. கிராஸ் காரில்  83kWh லித்தியம் ஐயன் பேட்டரி பொருத்தப்பட்டு முன்புற சக்கரங்களுக்கு 102hp பவர் மற்றும் 140Nm டார்க் வெளிப்படுத்தும் மின்சார மோட்டார் மற்றும் பின்புற சக்கரங்களுக்கு பொருத்தப்பட்டுள்ள மின்சார மோட்டார் 204hp பவர் மற்றும் 310Nm டார்க் வெளிப்படுத்தும். ஆக மொத்தமாக ஐடி.கிராஸ் மின்சார காரின் அதிகபட்ச பவர் 306hp மற்றும் 450Nm டார்க் கொண்டிருக்கும்.

I.D. Crozz மின்சார எஸ்யூவி காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 180 கிமீ ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.

 volkswagen id crozz

சர்வதேச அளவில் 2020 ஆம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு கிடைக்க உள்ள ஃபோக்ஸ்வேகன் I.D. Crozz இந்தியாவில் 2021 ஆம் ஆண்டின் மத்தியில் வெளியிடப்படலாம்.

 volkswagen id crozz