ஃபோக்ஸ்வேகன் காம்பேக்ட் எஸ்யூவி டீசர் – ஜெனிவா மோட்டார் ஷோ

வருகின்ற ஜெனிவா மோட்டார் ஷோ 2016யில் ஃபோக்ஸ்வேகன் புதிய சிறியரக காம்பேக்ட் எஸ்யூவி கான்செப்ட் மாடலின் டீசர் படத்தை வெளியிட்டுள்ளது. காம்பேக்ட் க்ராஸ்ஓவர் உற்பத்தி நிலை மாடலாக இருக்கும்.

Autodesk VRED Professional 2014 SR1-SP7

டைகன் மற்றும் T-Roc போன்ற மாடல்களை போலவே சிறிய எஸ்யூவி மாடலாக வரவுள்ள இந்த கான்செப்ட் எப்பொழுது உற்பத்திக்கு செல்லும் போன்ற விபரங்கள் எதுவும் உன்னும் வெளியாகவில்லை . மேலும் தட்டையான எல்இடி முகப்பு மற்றும் சதுர வடிவ பனி விளக்குகளை பெற்றுள்ள இந்த கான்செப்டில் அலாய் வீலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மூன்று படங்களுமே முகப்பினை காட்டுவதனால் பக்கவாட்டு தோற்றம் மற்றும் பின்புறத்தினை காட்டும் படங்களை வெளியிடப்படவில்லை. வரும் மார்ச் 1ந் தேதி தொடங்க உள்ள உலக பிரசத்தி பெற்ற ஜெனிவா மோட்டார் ஷோவில் எண்ணற்ற புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

தொடர்ந்து மோட்டார் ஷோ செய்திகளை படிக்க ; மோட்டார் ஷோ செய்திகள்