Automobile Tamilan

அசோக் லேலண்ட் ஹைபஸ் , சன்ஷைன், குரு , யூரோ6 டிரக் – ஆட்டோ எக்ஸ்போ 2016

அசோக் லேலண்ட் நிறுவனம் 4 புதிய மாடல்களை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்தது. அவை ஹைபஸ் , சன்ஷைன் , குரு மற்றும் யூரோ6 டிரக் போன்றவற்றை டெல்லி ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் காட்சிப்படுத்தியது.

Ashok-Leyland-launches-4940-Euro-6

அசோக் லைலேண்டு நிறுவனம் வர்த்தக வாகன பிரிவில் இந்தியளவில் இரண்டாமிடத்தில் உள்ளது. கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட அனைத்து மாடல்களுமே பார்வையாளர்கள் மற்றும் வர்த்தக வாகன பயன்பாட்டாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.

அசோக் லேலண்ட் யூரோ 6 டிரக்

இந்திய வர்த்தக மற்றும் கனரக வாகன தயாரிப்பாளர்களிலே முதன்முறையாக யூரோ 6 சுற்றுச்சூழல் விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்டுள்ள  4940 யூரோ 6 டிரக்கில் பொருத்தப்பட்டுள்ள யூரோ 6 மாசு விதிகளுக்குட்பட்ட என்ஜின் ஆனது தற்பொழுது பயன்பாட்டில் உள்ள யூரோ 3 (பிஎஸ்3) என்ஜினை விட நைட்ரஜன் ஆக்ஸைடு வாயிவினை 10யில் ஒரு பங்கு குறைவாக வெளியிடும் என்ஜினாகும். இந்திய விலையில் தரமான யூரோ 6 டிரக்கினை லைலேண்டு தயாரித்துள்ளது.

அசோக் லேலண்ட் ஹைபஸ்

இந்தியாவின் முதல் பிளக்இன் இல்லாத ஹைபிரிட் பேருந்து என்ற பெருமையுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஹைபஸ் சுற்றுச்சூழல் ஏற்ற நண்பனாக விளங்கும். எதிர்காலத்தில் சிறப்பான வகையில் மாசு உமிழ்வினை கட்டுப்படுத்தும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஹைபஸ் பேருந்து குறைவான விலையில் சிறப்பான பல வசதிகளை கொண்டதாகவும் நகர போக்குவரத்துக்கு ஏற்ற பேருந்தாகவும் விளங்கும். என்ஜின் ஆற்றலை கொண்டே பேட்டரி வாயிலாக மின்சாரத்தை சேமித்து அந்த ஆற்றலை கொண்டே இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அசோக் லேலண்ட் சன்ஷைன்

பள்ளி குழந்தைகளுக்கு ஏற்ற வாகனமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள சன்ஷைன் ஸ்கூல் பேருந்தில் அடுத்த தலைமுறை பாதுகாப்பு அம்சங்களான வாகனம் உருள்வதனை தடுக்கும் ரோல்ஓவர் மற்றும் முன்பக்க மோதலின் தாக்கத்தை குறைக்கு ஃபிரென்டல் க்ராஷ் போன்றவற்றுடன் ஐ -அலர்ட் எனப்படும் டிராக்கிங் மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது. i-ALERT உதவியுடன் பெற்றோர்களுக்கு குழந்தைகள் பள்ளி வாகனத்தில் ஏறும் மற்றும் இறங்கும் நேரம் , பள்ளி நிர்வாகிகள் வளாகத்தில் இருந்தவாறே குழந்தைகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க இயலும்.

அசோக் லேலண்ட் குரு

இடைநிலை வர்த்தக வாகனங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள குரு டிரக் அதிகபட்ச எடை தாங்கும் திறனுடன் அலுமினியம் அலாய் வீல் மற்றும் அலுமினிய லோட் பாடி ஃபிட்மென்ட் கொண்டதாகும். அதிகபட்ச மைலேஜ் மற்றும் குறைவான பராமரிப்பு செலவு கொண்ட  H-சீரிஸ் CRS என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

 

Exit mobile version