லம்போர்கினி உரஸ் எஸ்யூவி அறிமுகம் ஏப்ரல் 2017 – ஆட்டோ சீனா

வருகின்ற ஏப்ரல் 2017 ல் நடைபெறவுள்ள சாங்காய் ஆட்டோ ஷோ 2017 அரங்கில் உற்பத்தி நிலை லம்போர்கினி உரஸ் எஸ்யூவி காட்சிக்கு வரவுள்ளது. ஆன்ரோடு மற்றும் ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற மாடலாக உரஸ் விளங்கும்.

lamborghini urus

உரஸ் எஸ்யூவி

முதன்முறையாக 2012 ஆட்டோ சீனா ஷோ வாகன கண்காட்சியில் பார்வைக்கு வந்த உரஸ் கான்செப்ட் மாடல் 5 ஆண்டுகளுக்கு பிறகு உற்பத்தி நிலை மாடலாக காட்சிக்கு வருகின்றது.  ஹைபிரிட் வசதியுடன் வரவுள்ள லம்போர்கினி நிறுவனத்தின் முதல் மாடலாக இந்த எஸ்யூவி இடம்பிடிக்க உள்ளது.

இத்தாலியின் சான்டா அகடா தொழிற்சாலையில் வடிவமைக்கப்பட உள்ள உரஸ் எஸ்யூவி காரின் விற்பனையை ஆண்டுக்கு 3500 எண்ணிக்கையில் விற்பனை செய்யும் நோக்கில் லம்போர்கினி திட்டமிட்டு வருகின்றது. பல்வேறு பிரிமியம் வசதிகளை கொண்ட மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த மாடலில் பிளக்-இன் ஹைபிரிட்  4.0 லிட்டர் வி8 என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. பென்டைகா மற்றும் ஆடி க்யூ7 கார்களில் இடம்பெற்றுள்ள என்ஜினாகும்.

gallery urus 7

உரஸ் மாடலுக்கு போட்டியாளர்கள் பெண்டைகா ,எக்ஸ்7 , ஆடி Q8 என பல்வேறு பிரிமியம் எஸ்யூவி கார்களுக்கு சவாலாக விளங்கும்… மேலும் விபரங்கள் வரும் இணைந்திருங்கள்……..

gallery urus 4