Automobile Tamilan

கியா ஸ்டிங்கர் ஸ்போர்ட்ஸ் செடான் அறிமுகம்

2017 டெட்ராய்ட் ஆட்டோ கண்காட்சி அரங்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கியா ஸ்டிங்கர்  ஸ்போர்ட்டிவ் செடான் மாடல் அனைவரையும் கவர்ந்துள்ளது. பிஎம்டபுள்யூ 4 சீரிஸ் கிரான் கூபே மாடலுக்கு எதிராக கியா ஸ்டிங்கர் நிலைநிறுத்தப்பட உள்ளது.

ஸ்டிங்கர் ஸ்போர்ட்ஸ் என்ஜின்

மிகவும் சக்திவாய்ந்த ஸ்போர்ட்டிவ் செடான் ரக மாடலாக 5 இருக்கைகளை பெற்றுள்ள ஸ்டிங்கர் காரில் 365hp பவர் ,494 என்எம் டார்கையும் வெளிப்படுத்தும் 3.3 லிட்டர் வி6 டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். மேலும் பேஸ் மாடலில் 255hp பவர் , 352 என்எம் டார்கையும் வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இரு என்ஜின்களிலும் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்று ஆற்றலை ரியர் வீலுக்கு எடுத்து செல்லும் ஆப்ஷனலாக ஆல் வீல் டிரைவ் காரும் கிடைக்கும்.

0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 5.1 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும். கியா ஸ்டிங்கெர் காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 269 கிமீ ஆகும்.

ஐரோப்பா கியா டிசைன் ஸ்டூடியோவால் வடிவமைக்கப்பட்டுள்ள ஸ்டிங்கர் மாடலானது 4,831 மிமீ நீளத்தை பெற்றுள்ளதால் மிக தாரளமான இடவசதியை கொண்டதாக விளங்கும். உட்புறத்தில் 7 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின் மென்ட் சிஸ்டம்  , 3 ஸ்போக்குகளை கொண்ட ஸ்டீரியரிங் வீல் ,720 வாட்ஸ் திறனுடன் 15 ஸ்பீக்கர்களை கொண்ட ஆடியோ சிஸ்டத்தை கொண்டுள்ளது.

மிகவும் சவாலான சொகுசு பிராண்ட் கார்களான  பிஎம்டபுள்யூ 4 சீரிஸ் கிரான் கூபே மற்றும் ஆடிஏ5 ஸ்போர்ட்ஸ்பேக் மாடல்களுக்கு எதிராக நிலை நிறுத்தப்பட்டுள்ள ஸ்டிங்கர் அடுத்த சில மாதங்களில் அமெரிக்கா சந்தையில் விற்பனைக்கு செல்ல உள்ளது.

Exit mobile version