கியா ஸ்டோனிக் காம்பேக்ட் எஸ்யூவி அறிமுகம்..!

கியா நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடலாக கியா ஸ்டோனிக் காம்பேக்ட் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வருகின்ற ஃபிராங்ஃபர்ட் மோட்டார் ஷோவில் ஸ்டோனிக் வெளிப்படுத்தப்பட உள்ளது.

கியா ஸ்டோனிக் காம்பேக்ட் எஸ்யூவி

சமீபத்தில் ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்டுள்ள ஹூண்டாய் கோனா எஸ்யூவி மாடலின் கியா பேட்ஜ் பதிக்கப்பட்ட மாடலே கியா ஸ்டோனிக் எஸ்யூவி மாடலாகும்.  நிசான் ஜூக் மற்றும் ரெனோ காப்டூர் போன்ற மாடல்களுக்கு நேரடியான சவாலாக ஸ்டோனிக் விளங்கும்.

கோனா மாடலில் இருந்து வித்தியாசப்படும்வகையில் கியா நிறுவனத்தின் பாரம்பரியமான கிரில் தோற்ற அமைப்புடன் கூடிய மாடலாக வந்துள்ள ஸ்டோனிக் எஸ்யூவி காரில் 1.2 லிட்டர் மற்றும் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனுடன் கூடுதலாக 1.6 லிட்டர் டீசல் எஞ்சின்வ மற்றும் 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சினும் பொருத்தப்பட்டிருக்கும்.

பல்வேறு நவீன வசதிகளான தானியங்கி பிரேக்கிங் சிஸ்டம் ,பிளைன்ட் ஸ்பாட் அறிதல் உள்பட ரியர் கிராஸ் டிராஃபிக் அலர்ட் , லேன் டிப்ரேச்சர் வார்னிங் போன்றவற்றை பெற்றிருக்கும்.

Kia Stonic Compact SUV Image gallery

 

Exit mobile version