ஜீப் கிராண்ட் செரோக்கீ எஸ்யூவி அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2016

2016 டெல்லி வாகன கண்காட்சி ஜீப் கிராண்ட் செரோக்கீ எஸ்யூவி கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. செரோக்கீ சம்மீட் மற்றும் லிமிடேட் என இரு விதமான வேரியண்டில் விற்பனைக்கு வரும்.

ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜீப் கிராண்ட் செரோக்கீ SRT , கிராண்ட் செரொக்கீ , ரேங்கலர் போன்ற மாடல்கள் இந்த ஆண்டின் மத்தியில் முதற்கட்டமாக மெட்ரோ நகரங்களில் டீலர்களை திறந்து விற்பனை செய்ய உள்ளது. இந்த வருடத்தின் இறுதிக்குள் முதல் தர நகரங்கில் டீலர்களை திறக்க ஃபியட் கிறைஸ்லர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

கிராண்ட் செரோக்கீ  மாடலில் 237 bhp ஆற்றலை வழங்கும்  3.0 லிட்டர் வி6 டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 570 Nm ஆகும். இதில் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.  இதில் 4 வீல்களுக்கும் ஆற்றலை எடுத்து செல்லும் குவாட்ரா ட்ராக்  II  ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் உள்ளது.  இரு வேரியண்டிலும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்தினை பெற்றுள்ளது.

முகப்பில் பை-ஸெனான் அடாப்டிவ் முகப்பு விளக்குகள் , எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகள் , பார்க்கிங் சென்சார் ரிவர்ஸ் வீயூ கேமரா , எலக்ட்ரிக் டெயில்கேட் , 20 இஞ்ச் க்ரோம் அலாய் வீல் சம்மீட் வேரியண்ட் மற்றும் 18 இஞ்ச் அலாய் வீல் லிமிடேட் வேரியண்டில் இருக்கும்.

லிமிடேட் வேரியண்டில்

சம்மீட் வேரியண்டில்

லிமிடேட் வேரியண்ட் வசதிகளுடன் கூடுதலாக

ஜீப் கிராண்ட் செரோக்கீ எஸ்யூவி காரில் பெட்ரோல் ஆப்ஷனும் விற்பனைக்கு வரும் வாய்ப்புகள் உள்ளது.

Exit mobile version