ஜீப் ரேங்கலர் எஸ்யூவி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில்  ஜீப் ரேங்கலர் அன்லிமிடேட் எஸ்யூவி கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கிராண்ட் செரோக்கீ , கிராண்ட் செரோக்கீ SRT  போன்ற மாடல்களும் காட்சிக்கு வந்துள்ளன.

jeep-wrangler-auto-expo-2016

முதல்கட்டமாக ஜீப் பிராண்டு எஸ்யூவி கார்கள் முழுதும் வடிவமைக்கப்பட சிபூயூ மாடலாக இறக்குமதி செய்யப்பட உள்ளது. 2017 ஆம் ஆண்டின் மத்தியில் இந்தியாவிலே ஜீப் கார்கள் உற்பத்தி செய்ய ஃபியட் கிறைஸ்லர் திட்டமிட்டுள்ளது.

2 கதவுகளை கொண்ட நார்மல் மாடல் இந்தியாவிற்கு வரவில்லை அதிக வீல்பேஸ் கொண்ட 4 கதவுகளை பெற்றுள்ள ரேங்கலர் அன்லிமிடேட் மாடல் 197 bhp ஆற்றலை வழங்கும் 2.8 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கும். இதில 5 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது.

நீளம் ; 4751 மிமீ

அகலம் ; 1877 மிமீ

உயரம் ; 1840மிமீ

வீல் பேஸ்  ; 2497மிமீ

இதில் 17 இஞ்ச் அலாய் வீல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆஃப்ரோடு அனுபவத்திற்கு ஏற்ற மாடலாக விளங்கும் வகையில் ஜீப் ரேங்கலர் அன்லிமிடேட் மாடல் விளங்கும். டீசல் தவிர பெட்ரோல் மாடலிலும் ரேங்கலர் வர வாய்ப்புகள் உள்ளது.

மேலும் ஆட்டோ எக்ஸ்போவில் ஜீப் பிராண்டு பற்றி  படிக்க  : ஜீப்

Exit mobile version