டாடா நெக்ஸான் , ஹெக்ஸா , கைட்5 , ஸீக்கா – ஆட்டோ எக்ஸ்போ 2016

0

டாடா மோட்டார்ஸ் பயணிகள் கார் பிரிவில் நெக்ஸான் எஸ்யூவி , ஹெக்ஸா எஸ்யூவி , ஸீக்கா செடான் (கைட் 5) , ஸீக்கா , போல்ட் ஸ்போர்ட் மற்றும் சாஃபாரி ஸ்ட்ராம் போன்ற மாடல்களை வரும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்த உள்ளது.

2016-Tata-Zica

வர்த்தக பிரிவில் புதிய சொகுசு பஸ் பிராண்டு அறிமுகம் , புதிய டிரக்குகள் , நவீன தொழில்நுட்பங்களை பெற்ற பிரைமா ரேஞ்ச் டிரக் இவற்றுடன் மேலும் டாடா டி1 பிரைமா ரேசிங் டிரக் , ஏஸ் மேஜிக் XL மற்றும் மேஜிக் ஐரிஸ் ஜிவா போன்ற மாடல்கள்டன் டாடா நிறுவனத்தின் புதிய டிசைன் மொழியான இம்பேக்ட் டிசைன் போன்றவை டெல்லி ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் ஹால் எண் 14யில் காட்சி தருகின்றது.

டாடா ஸீக்கா

ஸீக்கா கார் உலகளவில் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ வாயிலாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. சிறப்பான காம்பேக்ட் காராக ஸீகா விளங்கும்.

மேலும் படிக்க ; டாடா ஸீகா காரின் முழுவிபரம்

டாடா ஸீகா செடான்

ஸீகா காரினை அடிப்படையாக கொண்ட செடான் மாடலை கைட்5 என்ற குறியீட்டு பெயரில் விற்பனைக்கு வரவுள்ள செடான் கார் எக்ஸ்போவில் பார்வைக்கு வருகின்றது.

டாடா ஹெக்ஸா

ஆரியா எம்பிவி மாடலை அடிப்படையாக கொண்ட ஹெக்ஸா க்ராஸ்ஓவர் ரக எஸ்யூவி மாடலில் 154bhp ஆற்றலை வழங்கும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். ஹெக்ஸா உற்பத்திநிலை மாடல் பார்வைக்கு வருகின்றது.

டாடா நெக்ஸான்

காம்பேக்ட் ரக எஸ்யூவி கார்களுக்கு போட்டியாக வுரவுள்ள டாடா நெக்ஸான் கான்செப்ட் மாடலின் உற்பத்தி நிலை மாடல் பார்வைக்கு வரலாம் இதில் ரெவோட்ரான் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் புதிய 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த மாடல் டியூவி300 , இக்கோஸ்போர்ட் , BR-V மற்றும் சுசூகி ப்ரெஸ்ஸா போன்ற மாடல்களுடன் போட்டியிடும்.

 

டாடா போல்ட் ஸ்போர்ட்

போல்ட் ஹேட்ச்பேக் காரினை அடிப்படையாக கொண்ட 120bhp ஆற்றலை வழங்கும் பெர்ஃபாமென்ஸ் ரக போல்ட் ஸ்போர்ட் காரை ஜெனிவா ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியது. அதே மாடல் மீண்டும் காட்சிக்கு வருகின்றது.

Tata T1 prima truck Racing
டாடா டி1 பிரைமா ரேசிங் டிரக்

வர்த்தக வாகன பிரிவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய சொகுசு பேருந்து பிராண்டினை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது வால்வோ , ஸ்கேனியா போன்ற மாடல் பேருந்துகளுக்கு போட்டியாக இது அமையும். மேலும் பிரபலமான டாடா டி1 பிரைமா ரேசிங் டிரக்கினை பார்வைக்கு வைக்கின்றது.