Automobile Tamil

டாமோ ஃப்யூச்சரோ டீஸர் – 2017 ஜெனிவா மோட்டார் ஷோ

வருகின்ற மார்ச் 7ந் தேதி சர்வதேச அளவில் 2017 ஜெனிவா மோட்டார் ஷோ வாயிலாக டாமோ ஃப்யூச்சரோ ஸ்போர்ட்ஸ் கான்செப்ட் கார் மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. டாடா ஃப்யூச்சரோ கார் விற்பனைக்கு 2018 தொடக்க மாதங்களில் வரவுள்ளது.

டாடாவின் புதிய துனை நிறுவனமாக களமிறங்கியுள்ள டாமோ பிராண்டில் ஸ்போர்ட்ஸ் மற்றும் பிரிமியம் ரக மாடல்களை தயாரிக்க டாடா குழுமம் திட்டமிட்டுள்ளது. முதல் கான்செப்ட் மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ள ஃப்யூச்சரோவில் உள்ள சில முக்கிய வசதிகளை பார்க்கலாம்.

டாமோ ஃப்யூச்சரோ

ரூ. 25 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகின்ற ஃப்யூச்சரோ (TAMO Futuro) மிட் என்ஜின் ஸ்போர்ட்டிவ் காரில் இரண்டு இருக்கை ஆப்ஷனுடன் டாடாவின் ரெவோட்ரான் 1.2 லிட்டர் ட்வீன் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கலாம். இதன் பவர் அதிகபட்சமாக 180 ஹெச்பி வரை வெளிப்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

<!–nextpage–>

ஃப்யூச்சரோ காரின் வடிவ தாத்பரியங்களில் மிகுந்த கவனம் செலுத்தும் நோக்கில் புகழ்பெற்ற கார் டிசைனர் மார்செல்லோ காந்தினி அவர்களால் வடிவமைக்கப்பட்டு கொடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

87வது ஜெனிவா மோட்டார் ஷோ அரங்கில் முதன்முறையாக ஃப்யூச்சரோ கான்செப்ட் காட்சிக்கு வருகின்றது. அதனை தொடர்ந்து 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் உற்பத்தி நிலை மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

AMP (Advanced Modular Platform)

டாமோ பிராண்டில் உருவாக்கப்பட உள்ள மாடல்கள் AMP  எனப்படும் புதிய பிளாட்பாரத்திலே உருவாக்கப்பட உள்ளது. இந்த கார்கள் உலக தரம் வாய்ந்த டிசைன் தாத்பரியங்களுடன் மிகவும் சவாலான விலையில் சர்வதேச அரங்கில் விற்பனை செய்யப்பட உள்ளது.

டாடா நிறுவனத்தின் அடுத்தடுத்து வரவுள்ள லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் காரின் அடிப்படையிலான பிரிமியம் எஸ்யூவி கார்களான Q501 மற்றும் Q502 கார்களும் டாமோ பிராண்டிலே விற்பனை செய்யப்படலாம்.

Exit mobile version