டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் டிவிஎஸ் என்டார்க்210 ஸ்கூட்டர் கான்செப்ட் அறிமுகம்

கடந்த பிப்ரவரி 5ந் தேதி முதல் நடந்து வரும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் டிவிஎஸ் என்டார்க்210 ஸ்கூட்டர் கான்செப்ட் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. டூரிங் ரகத்தில் மிகவும் பிரிமியமான பெர்ஃபாமென்ஸ் ஸ்கூட்டராக ENTORQ210 கான்செப்ட் விளங்குகின்றது.

tvs-entorq210-scooter-cocept

 

மோட்டார்சைக்கிள் உந்துதலில் உருவாக்கப்பட்டுள்ள கான்செப்ட் மாடலான என்டார்க்210 மாடல் மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் என இருபிரவுகளின் கலப்பில் உருவான க்ராஸ்ஓவர் ரக மாடலாக அடுத்த தலைமுறை ஸ்கூட்டராக இது விளங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்டார்க்210 கான்செப்ட் ஸ்கூட்டரில் 212.5சிசி லிக்யூடூ கூல்டு எஃப்ஐ என்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கும் . இது இலகு எடை மற்றும் உறுதிமிக்க அலுமிணியத்தால் உருவாக்கப்பட்டிருக்கும். இதில் வேரியோமேட்ரிக் கியர்பாக்ஸ் பெற்றிருக்கும். முன்பக்கத்தில் இன்வெர்டேட் ஃபோர்க்குகள் , பின்புறம் மோனோ ஷாக் அப்சார்பர் , ஸ்மார்ட் கீ , பல தகவல்களை தரவல்ல டிஜிட்டல் கன்சோல் , ரோட்டோ பெடல் டியூவல் டிஸ்க் ஏபிஎஸ் பிரேக் , நவீன எல்இடி விளக்கு அமைப்பினை பெற்றிருக்கும்.

மேலும் ஸ்மார்ட் மொபைல் போன் நேவிகேஷன் தொடர்பு , ஸ்டார்ட் / ஸ்டாப் பொத்தான், 8.5 லிட்டர் பெட்ரோல் டேங் போன்றவற்றுடன் பல நவீன அம்சங்களை டிவிஎஸ் என்டார்க் 210 பெற்றிருக்கும். இலகு எடையுடன் மிக வலுமிக்க ஹை கிரேட் ஸ்டீல் கொண்டு இதன் சேஸீ வடிவமைக்கப்பட உள்ளது.

[envira-gallery id="7127"]

Exit mobile version