Automobile Tamil

டொயோட்டா கால்யா எம்பிவி அறிமுகம் – 2016 இந்தோனேசியா ஆட்டோ ஷோ

இந்தோனேசியாவில் டொயோட்டா கால்யா எம்பிவி கார் 2016 இந்தோனேசியா ஆட்டோ ஷோ அரங்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கால்யா மினி எம்பிவி மாடல் இந்தியா வருமா என்பதற்கான உறுதியான தகவல் இல்லை.

Toyota-Calya

இந்தோனேசியா சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள டொயோட்டா கால்யா எம்பிவி கார் டொயோட்டா மோட்டார் நிறுவனத்தின் டைகட்சூ பிராண்டின் சிகாரா மாடலினைஅடிப்படையாக கொண்டதாக டொயோட்டா அவன்ஸா காருக்கு கீழாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

கால்யா கார் 4,070மிமீ நீளம், 1,655மிமீ அகலம், மற்றும் 1,600மிமீ உயரம் கொண்டுள்ளது. இதன் வீல் பேஸ் 2,525மிமீ ஆகும்.   7 இருக்கைகளை கொண்டுள்ள கல்யா கார் இந்தேனேசியாவில் குறைந்த விலை க்ரீன் கார் (Low Cost Green Car – LCGC ) தளத்தில் வடிவமைக்கபட்டுள்ளது.

சிறப்பான வடிவமைப்புடன் அமைந்துள்ள கால்யா எம்பிவி காரின் முகப்பில் ஓற்றை ஸ்லாட் க்ரோம் பட்டைக்கு மத்தியில் அமைந்துள்ள டொயோட்டா லோகா , ஸ்டைலிசான முன்பக்க கிரில் நேர்த்தியான பனி விளக்குகள் மற்றும் ஹெட்லேம்பை பெற்றுள்ளது. பின்புறத்தில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா வடிவிலான தோற்ற பொலிவுடன் கூடிய எல் வடிவ டெயில் விளக்குகளை பெற்றுள்ளது.

உட்புறத்தில் 7 இருக்கை ஆப்ஷனுடன் நேர்த்தியான டேஸ்போர்டு அமைப்பு ,இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் , 2 டின் ஆடியோ சிஸ்டம் , முன்பக்கத்தில் இரட்டை  காற்றுப்பைகள் , ஏபிஎஸ் , இபிடி போன்றவை உள்ளது.

இந்தோனேசியா குறைந்த விலை க்ரீன் கார் விதிகளுக்கு உட்பட்ட   88 பிஎஸ் பவரையும், 108என்எம் டார்க்கையும் வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 5 வேக மெனுவல் மற்றும் 4 வேக ஆட்டோ கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவில் டொயோட்டா கால்யா வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.  டட்சன் கோ ப்ளஸ் , மாருதி எர்டிகா போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையலாம்.

Exit mobile version