நிசான் எக்ஸ் ட்ரெயில் ஹைபிரிட் எஸ்யூவி வருகை – ஆட்டோ எக்ஸ்போ 2016

0

ஆட்டோ எக்ஸபோவில் நிசான் எக்ஸ் ட்ரெயில் ஹைபிரிட் எஸ்யூவி மாடல் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது தவிர நிசான் ஜிடி ஆர் மாடலும் பார்வைக்கு வரலாம் என தெரிகின்றது.

nissan-x-trail
நிசான் எக்ஸ் ட்ரெயில்

நிசான் எக்ஸ் ட்ரெயில் எஸ்யூவி காரின் ஹைபிரிட் மாடல் இந்திய சந்தைக்கு வரலாம் என தெரிகின்றது. பல வெளிநாடுகளில் விற்பனையில் உள்ள 179 bhp  ஆற்றலை வழங்கும் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைந்த ஹைபிரிட் மாடல் வருகின்றது. இதில் 4வீல் டிரைவ் சிஸ்டம் இருக்கும்.

Google News

5 மற்றும் 7 என இருவிதமான ஆப்ஷனில் உள்ள எக்ஸ் ட்ரெயில் காரில் 7 இருக்கை கொண்ட மாடல் வரலாம். மேலும் முன்புபோல விற்பனை குறைவாக இல்லாமல் சிறப்பான எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் சிறப்பான சேவையை வழங்கவும் நிசான் திட்டமிட்டுள்ளது.

முதற்கட்டமாக முழுதும் வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்பட உள்ள எக்ஸ்-ட்ரெயில் வரும் காலத்தில் பாகங்களை தருவித்து இந்தியாவிலே ஒருங்கினைக்க திட்டமிட்டுள்ளது.

ஹைபிரிட் எஸ்யூவி காராக எக்ஸ்-ட்ரெயில் வரும்பட்சத்தில் FAME இந்தியா திட்டத்தின் கீழ் வரிச்சலுகை கிடைக்கும் என்பதனால் மிக சவாலான விலையில் வரலாம் என தெரிகின்றது.

கடந்த 2014 ஆம் ஆண்டு விற்பனையில் இருந்த நிசான் எக்ஸ் ட்ரெயில் குறைவான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்த காரணத்தால் திரும்ப அழைக்கப்பட்டது. வரும் பிப்ரவரி மாதம் விற்பனைக்கு வரும் எக்ஸ் ட்ரெயில் விலை ரூ.30 லட்சம் இருக்கலாம்.

மேலும் நிசான் ஜிடி ஆர் ஸ்போர்ட்ஸ் மாடலும் இந்த வருடம் விற்பனைக்கு வரவுள்ளதால் காட்ஸில்லா என்கின்ற GT-R காரும் பார்வைக்கு வரலாம்.