புதிய சுஸூகி எஸ் க்ராஸ் வருகை – 2016 பாரீஸ் மோட்டார் ஷோ

0

மேம்படுத்தப்பட்ட புதிய சுஸூகி எஸ் க்ராஸ் காரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. முன்பக்க தோற்ற அமைப்பில் புதிய தோற்ற பொலிவுடன் மாருதி எஸ் க்ராஸ் நேர்த்தியாக காட்சியளிக்கின்றது.

Suzuki-SX4-S-Cross-Facelift1

 

வருகின்ற அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள 2016 பாரீஸ் மோட்டார் ஷோவில் பார்வைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் ஐரோப்பியா எஸ் க்ராஸ் அதனை தொடர்ந்து பல வெளிநாடுகள் மற்றும் இந்தியாவில் அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வரலாம்.

வெளியாகியுள்ள படங்களின் வாயிலாக எஸ் க்ராஸ் மிக நேர்த்தியான புதிய பம்பர் , செங்குத்தான ஸ்லாட்டுகளை கொண்ட கிரிருக்கு மத்தியில் அமைந்திருக்கும் சுஸூகி லோகோ , புராஜெக்டர் முகப்பு விளக்கு , க்ரோம் பூச்சு கொண்ட பனி விளக்கு அறை போன்றவை சிறப்பாக அமைந்துள்ளது.

உட்புறத்தில் புதிய இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் , புதுப்பிக்கப்பட்ட டேஸ்போர்டு , புதிய இருக்கை வண்ணங்கள் மற்றும் கூடுதல் வசதிகளை பெற்றிருக்கும்.

சர்வதேச அளவில் 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களில் கிடைக்கின்ற எஸ் க்ராஸ் இந்தியாவில் 1.3 லிட்டர் மற்றும் 1.6 டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கின்றது. மேலும் விரைவில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மாடலில் வரலாம்.