புதிய டொயோட்டா பிரையஸ் அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2016

0

புதிய டொயோட்டா இன்னோவா காரை தொடர்ந்து புதிய டொயோட்டா பிரையஸ் ஹைபிரிட் கார் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய TNGA தளத்தில் உருவாக்கப்பட்டுள்ள முதல் மாடலாக பிரையஸ் கார் விளங்குகின்றது.

டொயோட்டா நியூ குளோபல் ஆர்க்கிடச்சர் தளத்தில் உருவாக்கப்பட்டுள்ள 4வது தலைமுறை பிரையஸ் காரில் 1.8 லிட்டர் 4 சிலிண்டர் இன்லைன் கேஸோலின் இஞ்ஜின் மற்றும் பேட்டரி பவர் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இதில் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது.

1.8 லிட்டர் என்ஜின் ஆற்றல் 97 hp ஆற்றலை வெளிப்படுத்தும் மின் மோட்டார்  71 hp ஆற்றலை வெளிப்படுத்தும் இரண்டின் ஒட்டுமொத்த ஆற்றல் 121 hp ஆகும். இது முந்தைய தலைமுறை மாடலை விட 13 hp குறைவாக இருந்தபொழுதும் சிறப்பான பெர்ஃபாமென்ஸ் மற்றும் செய்லதிறனை தரவல்லதாகும். மூன்று விதமான டிரைவிங் மோடினை கொண்டிருக்கும். அவை ஈக்கோ , பவர் மற்றும் நார்மல் ஆகும்.

புதிய TNGA தளத்தில் உருவாக்கப்பட்டுள்ள பிரையஸ் மாடல் சிறப்பான கையாளுமை திறன் , நிலைப்பு தனமை போன்றவற்றை கொண்டதாகும்.  மிராய் காரின் தாத்பரியங்களை பெற்றுள்ள பிரையஸ் மாடல் இந்தியாவில் இந்த ஆண்டின் இறுதியில் விற்பனைக்கு வர வாய்ப்புகள் உள்ளது.

சில முக்கிய வசதிகள்

  • ரிஜெனேரேட்டிவ் பிரேக் அமைப்பு
  • 6 காற்றுப்பைகள்
  • எல்இடி முகப்பு விளக்கு மற்றும் பகல் நேர ரன்னிங் விளக்குகள்
  • வயர்லெஸ் சார்ஜர்
  • முன்பக்க இருக்கை ஹீட்டர்