புதிய மெர்சிடிஸ் GLA எஸ்யூவி டீஸர் – டெட்ராய்ட் மோட்டார் ஷோ

0

வருகின்ற ஜனவரி 9ந் தேதி தொடங்க உள்ள 2017 டெட்ராய்ட் மோட்டார் ஷோ அரங்கில் மேம்படுத்தப்பட்ட புதிய மெர்சிடிஸ் GLA எஸ்யூவி மாடல் காட்சிக்கு வருவதை ஒட்டி டீஸர் படத்தினை பென்ஸ் வெளியிட்டுள்ளது.

புதிய மெர்சிடிஸ் ஜிஎல்ஏ டிசைன்

வெளியிடப்பட்டுள்ள ஜிஎல்ஏ டீஸர் படத்தின் வாயிலாக முன்பக்க தோற்ற மேம்பாடுகள் வெளியாகியுள்ளன குறிப்பாக முன்பக்க கிரில் மாற்றியமைக்கப்பட்டு , பம்பர் , ஹெட்லைட் , பனி விளக்கு அறைகளில் கருப்பு பூச்சூக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம் என தெரிகின்றது.

Google News

இதுபோன்ற பின்பக்க தோற்ற அமைப்பில் டெயில்லைட் , பம்பர்கள் மற்றும் பக்கவாட்டில் புதுப்பிக்கப்பட்ட அலாய் வீலை பெற்றதாக ஜிஎல்ஏ ஃபேஸ்லிஃப்ட் மாடல் விளங்கும்.

இன்டிரியரியல் சில கூடுதலான டிசைன் மேம்பாடுகளுடன் 8 அங்குல தொடுதிரை அமைப்புடன் கூடிய ஸ்மார்ட்போன் ஆதரவினை பெற்று விளங்குவதுடன் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளை பெற்றதாக விளங்கும்.

இந்தியாவில் விற்பனையில் உள்ள ஜிஎல்ஏ காரில் இடம்பெற்றுள்ள 2.2 லிட்டர் டீசல் என்ஜினில் எந்த மாற்றங்களும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்திய சந்தைக்கு இந்த வருடத்தின் மத்தியிலும் சர்வதேச அளவில் அடுத்த சில வாரங்களிலும் விற்பனைக்கு செல்ல உள்ளது.