மஹிந்திரா பிளேஷோ டிரக் ரேஞ்ச் அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2016

0

மஹிந்திரா வர்த்தக பிரிவு புதிய மஹிந்திரா பிளேஷோ வரிசை டிரக்குகளை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியது. பிளேஷோ டிரக் பிராண்டில் 25 டன் முதல் 49 டன் வரையிலான டிரக்குகளை நவீன நுட்பங்களை கொண்டதாக விளங்கும்.

mahindra-blazo37

Google News

பிளேஷோ டிரக்குகள் மிக சிறப்பான எரிபொருள் சிக்கனத்தை வழங்ககூடிய வகையில் ஃப்யூல் ஸ்மார்ட் நுட்பங்களை பயன்படுத்தியுள்ளதால் அதிக மைலேஜ் தரும் மாடல்களாக விளங்கும் . CRDe நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள என்ஜின்களை பெற்றுள்ள பிளேஷோ வரிசையில் பிளேஷோ 31 , பிளேஷோ 37 மற்றும் பிளேஷோ 49 டிரக்குகள் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

பிளேஷோ டிரக்குகளில் அதிக செயல்திறன் மற்றும் அதிகபட்ச டார்க் வெளிப்படுத்தும் 7.2 லிட்டர் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. Mpower ஃபூயூல் ஸ்மார்ட் நுட்பம் மற்றும் மல்டி டிரைவ் மோட் சுவிட்சுகளை பெற்றுள்ளது. டர்போ ,  ஹெவி மற்றும் லைட் என மூன்று விதமான மோடினை கொண்டுள்ளது.

பிரேக் டவுன் நேரங்களில் சிறப்பான சாலையோர உதவி மையம் மற்றும் வாகனத்தினை அடுத்த 48 மணி நேரங்களில் இயங்கும் வகையில் சிறபான சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது.

mahindra-Blazo31

mahindra-blazo37 mahindra-blazo37-cv