மாருதி இக்னிஸ் கார் காட்சிப்படுத்தப்பட்டது – ஆட்டோ எக்ஸ்போ 2016

0

வரும் பண்டிகை காலத்தில் விற்பனைக்கு வரவுள்ள மாருதி இக்னிஸ் கான்செப்ட் கார் ஆட்டோ எக்ஸ்போ 2016 கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.  இக்னிஸ் கார் நெக்ஸா டீலர்கள் வாயிலாக விற்பனை செய்யப்பட உள்ளது.

maruti-suzuki-IGNIS-concept

Google News

சிறப்பான ஸ்டைலிங் அம்சத்துடன் விளங்கும் இக்னிஸ் கார் 4 மீட்டருக்கு குறைவான நீளத்தில் அமைந்துள்ளது. இதன் நீளம் 3700மிமீ , அகலம் 1660மிமீ மற்றும் உயரம் 1595மிமீ ஆகும். இதன் வீல்பேஸ் 2438மிமீ ஆகும். வளர்ந்து வரும் நகரங்களுக்கு ஏற்ற காராக இக்னிஸ் கான்செப்ட் மையப்படுத்தப்பட்டுள்ளது.

முகப்பில் தேன்கூடு கிரிலுக்கு மத்தியில் அமைந்துள்ள க்ரோம் பட்டைக்கு மத்தியில் லோகோவினை பெற்றுள்ளது. புராஜெக்ட்ர் முகப்பு விளக்குகளுடன் கூடிய பகல் நேர ரன்னிங் எல்இடி விளக்குகளை கொண்டுள்ளது. பக்கவாட்டில் சிறப்பான ஸ்டைலினை தரவல்ல 10 ஸ்போக்குகளை கொண்ட 16 இஞ்ச் அலாய் வீலினை கொண்டுள்ளது.

சமீபத்தில் ஜப்பான் சந்தையில் விற்பனைக்கு வந்த இக்னிஸ் காரில் 1.25லிட்டர் டியூவல்ஜெட் பெட்ரோல் என்ஜினுடன் SHVS ஹைபிரிட் நுட்பத்தினை பெற்றுள்ளது. இதே என்ஜின் ஆப்ஷனுடன் 1.3 லிட்டர் DDiS200 டீசல் என்ஜின் ஆப்ஷனிலும் இந்தியாவில் வரவுள்ளது. ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனலாக கிடைக்க பெறலாம்.

வரும் தீபாவளி பண்டிகை காலத்தில் இக்னிஸ் விற்பனைக்கு வரலாம். இதன் விலை ரூ. 7 லட்சம் முதல் ரூ.11 லட்சத்தில் அமைய வாய்ப்புள்ளது.

[envira-gallery id="7141"]