Home Auto News

மாருதி ஈக்கோ டீசல் வருகை – ஆட்டோ எக்ஸ்போ 2016

மாருதி ஈக்கோ காரில் டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட மாடல் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. தற்பொழுது மாருதி ஈக்கோ பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி  விற்பனையில் உள்ளது.

மாருதி-ஈக்கோ

கடுமையான சவாலினை எதிர்கொண்டு வரும் மாருதி சுசூகி மாடல்களில் ஈக்கோ மினி வேனும் ஒன்றாகும். டாடா ஏஸ் மேஜிக் , மஹிந்திரா சூப்ரோ போன்றவற்றுடன் சந்தையை பகிர்ந்து கொண்டுள்ள ஈக்கோ வேனில் டீசல் என்ஜின் ஆப்ஷன் இதுவரை இல்லை. எனவே போட்டியாளர்களுடன் ஈடுகொடுக்கும் வகையில் 792சிசி செலிரியோ டீசல் என்ஜினை பொருத்தி விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

47 bhp ஆற்றல் மற்றும் 125 Nm டார்க் வழங்கும் 792சிசி டீசல் என்ஜினில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும். ஈக்கோ டீசல் மைலேஜ் லிட்டருக்கு 26 கிமீ வரை கிடைக்கலாம்

மேலும் ஆல்டோ 800 காரிலும் டீசல் மாடல் வரவுள்ளதை முன்பே வெளியிட்டிருந்தோம். ஊரகப் பகுதி மற்றும் வளர்ந்து வரும் நகரஙுகளில் சிறப்பான விற்பனை எண்ணிக்கை பதிவு செய்து வரும் ஈக்கோ கார் பல பயன்பாடுகளுக்கு ஏற்ற வாகனமாக உள்ளது. இதுதவிர மற்றொரு வேன் மாடல் காரான மாருதி ஆம்னி மாடலும் சிறப்பான எண்ணிக்கை பதிவு செய்து வருகின்றது. மாருதி சுசூகி மொத்த விற்பனையில் 10 % பங்களிப்பினை இரு வேன்களும் தருகின்றன.

5 மற்றும் 7 இருக்கை ஆப்ஷனில் மாருதி சுசூகி ஈக்கோ விற்பனையில் உள்ளது. வரும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் பார்வைக்கு வருகின்றது. அதனை தொடர்ந்து விற்பனைக்கு வரலாம்.

Exit mobile version