Automobile Tamilan

மாருதி விட்டாரா ப்ரீஸா எஸ்யூவி வரைபடம் – ஆட்டோ எக்ஸ்போ 2016

புதிய மாருதி விட்டாரா ப்ரீஸா எஸ்யூவி காரின் வரைபடத்தை மாருதி சுசூகி வெளியிட்டுள்ளது. வரும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2016 கண்காட்சியில் உலகளவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

maruti-vitara-brezza-suv-sketch
மாருதி விட்டாரா ப்ரீஸா

4 மீட்டருக்கு குறைவான நீளத்தில் காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடலாக வரவுள்ள மாருதி விட்டாரா ப்ரீஸா கார் மிக நேரத்தியான எஸ்யூவி ஸ்டைலுடன் மிக கம்பீரமாக விளங்கும் என தெரிகின்றது. விற்பனைக்கு இந்த வருடத்தின் மத்தியில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நகர்புற வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையிலான நேர்த்தியான டிசைன் தோற்றத்துடன் ரசிக்க தக்க வகையில் சிறப்பாக அமைந்திருக்கும். மேலும் வெளிதோற்றத்தில் சதுர வடிவ வீல் ஆர்சுகளுடன் மிக நேர்த்தியாக வரையறுக்கப்பட்ட அதிகப்படியான கிரவுண்ட் கிளியரன்ஸ் , மேற்கூறை சிறப்பான டைனமிக் அம்சங்களுடன் சிறப்பான திறை வெளிப்படுத்தக்கூடிய என்ஜின்களை பெற்றிருக்கும் என மாருதி சுசூகி தெரிவித்துள்ளது.

மாருதி விட்டாரா ப்ரீஸா காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களுடன் வரலாம் என தெரிகின்றது. மேலும் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என இரண்டிலும் வரும் என தெரிகின்றது.

எவ்விதமான நுட்ப விபரங்களையும் சுசூகி வெளியிடவில்லை பெயர் மற்றும் வரைபடமு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இத்தாலி மொழியில் ப்ரீஸா என்றால் தென்றல் என்பது பொருளாகும்.

Exit mobile version