மிட்சுபிஷி கிராண்ட் டூரர் எஸ்யூவி டீஸர் – 2016 பாரீஸ் மோட்டார் ஷோ

0

வருகின்ற அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள 2016 பாரீஸ் மோட்டார் ஷோ அரங்கில் புதிய  மிட்சுபிஷி கிராண்ட் டூரர் எஸ்யூவி கான்செப்ட் காரின் டீஸரை மிட்சுபிஷி வெளியிட்டுள்ளது. கூபே ரக வடிவத்தினை கொண்ட மாடாலாக கிராண்ட் டூரர்  விளங்கும்.

Mitsubishi Motors Ground Tourer Concept

Google News

புதிய ரக டிசைன் வடிவ தாத்பரியத்தில் எதிர்கால கார் மாடலாக வரவுள்ள கிராண்ட் டூரர்  எஸ்யுவி  கார் மிக சிறப்பான டிசைன் தாத்பரியங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் டீஸர் காரில் பல நவீன அம்சங்களுடன் ஹைபிரிட் ஆப்ஷனை பெற்றிருக்கலாம்.

ஆஃப் ரோடு அம்சங்களுடன் இணைந்த புதிய கிராண்ட் டூரர் கான்செப்ட் 2015 டோக்கியோ மோட்டார் ஷோவில் அரங்கில் வெளியான  மிட்சுபிஷி Ex எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலை சார்ந்துள்ளது. வருகின்ற அக்டோபர் மத்தியில் தொடங்க உள்ள பாரீஸ் மோட்டார் கண்காட்சியில் பல நிறுவனங்களின் எண்ணற்ற கான்செப்ட் மற்றும் உற்பத்திநிலை மாடல்கள் வெளியாக உள்ளது.

இந்தியாவில் மிட்சுபிஷி நிறுவனம் பஜெரோ ஸ்போர்ட் காரை மட்டுமே விற்பனை செய்து வந்த நிலையில் தற்பொழுது ரூ. 70 லட்சம் விலையில் மிட்சுபிஷி மான்ட்ரியோ காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.