யமஹா ஸ்போர்ட்ஸ் கார் டீசர்

0
டோக்கியோ மோட்டார் ஷோவில் யமஹா ஸ்போர்ட் கார் கான்செப்ட் பார்வைக்கு வரவுள்ளது. யமஹா 4வீலர் என்ற பெயரில் யமஹா நிறுவனத்தின் முதல் கார் வரவுள்ளது.

யமஹா ஸ்போர்ட்ஸ் கார் டீசர்

யமஹா 4 வீலர் என்ற பெயரில் வெளியிட்டுள்ள டீசரில் மோட்டார்சைக்கிளின் உந்துதலை அடிப்படையாக கொண்ட ஸ்போர்ட் காராக விளங்கும் என்பதனை தெரிவித்துள்ளது.

2013ம் ஆண்டில் மோட்டிவ் என்ற பெயரில் நகரங்களில் பயணம் செய்ய ஏற்ற 2 இருக்கை கொண்ட ஹைபிரிட் கார் மாடலை காட்சிப்படுத்தியது. அதனை தொடர்ந்து தற்பொழுது ஸ்போர்ட்ஸ் கார் கான்செப்ட்டை டீசர் செய்துள்ளது.

Google News

2 இருக்கைகளை கொண்ட ஸ்போர்ட்டிவ் காராக டீசரில் வந்துள்ள யமஹா 4 வீலர் காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கலாம்.

மேலும் படிக்க ; யமஹா மோட்டிவ் கார் எப்பொழுது வரலாம்

44வது டோக்கியோ மோட்டார் ஷோ வரும் அக்டோபர் 30ந் தேதி முதல் நவம்பர் 8ந் தேதி வரை டோக்கியோவில் நடைபெற உள்ளது. அதில் புதிய ஸ்போர்ட்ஸ் கார் மாடலை யமஹா அறிமுகப்படுத்த உள்ளது.

யமஹா மோட்டிவ் கார்
யமஹா மோட்டிவ் கார்
Yamaha 4wheeler teased