ஹீரோ ஸ்பிளெண்டர் ஐஸ்மார்ட் 110 அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2016

0

ஹீரோ மோட்டாகார்ப் நிறுவனம் புதிய ஹீரோ ஸ்பிளெண்டர் ஐஸ்மார்ட் 110 பைக்கினை டெல்லி ஆட்டோ எக்ஸ்போ – தி மோட்டார் ஷோ-வில் அறிமுகம் செய்துள்ளது.  ஹீரோ நிறுவனத்தாலே உருவாக்கப்பட்ட முதல் பைக் மாடலாகும்.

hero-splendor-ismart-110-auto-expo-2016

Google News

புத்தம் புதிய ஹீரோ ஸ்பிளெண்டர் ஐஸ்மார்ட் 110 பைக்கில்  புதிய என்ஜின் மற்றும் சேஸீ போன்றவற்றை பயன்படுத்தி ஹீரோ நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவால் உருவாக்கப்பட்டுள்ளது.

9.1 PS @7500 rpm ஆற்றல் மற்றும் 9Nm @ 5500 rpm டார்க் வழங்கும் 109.15cc ஏர் கூல்டு 4 ஸ்டோர்க் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 4 வேக கியர்பாக்ஸ் உள்ளது.  ஸ்பிளெண்டர் ஐஸ்மார்ட் 110 பைக் வேகம் மணிக்கு 87 கிமீ ஆகும்.  இந்த பைக்கில் ஹீரோ நிறுவனத்தின் i3S (Idle Stop and Start System ) நுட்பத்தினை பயன்படுத்தி சிறப்பான எரிபொருள் சிக்கனத்தினை தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. உலகின் அதிக மைலேஜ் தரும் பைக் என குறிப்பிட்டுள்ளது. மைலேஜ் விபரங்கள் வெளியிடப்படவில்லை.

முகப்பு விளக்கு மிக ஸ்டைலிசாக உள்ளது, பக்கவாட்டில் சிறப்பான ஸ்டைலினை தரும் வகையிலான பேனல்கள் போன்றவற்றை கொடுத்துள்ளது. பாடி கிராஃபிக்ஸ் , ஹெட்லைட் , டெயில் லைட் என அனைத்திலும் முந்தைய மாடல்களின் எந்த தாக்கமும் இல்லாமல் நேர்த்தியாக உருவாக்கியுள்ளது. விற்பனைக்கு இந்த வருடத்தின் மத்தியில் ஸ்பிளெண்டர் ஐஸ்மார்ட் 110 பைக் மிக சிறப்பான கம்யூட்டர் மாடலாக விளங்கும்.

hero-splendor-ismart-110

hero-splendor-ismart-110-features