ஹீரோ XF3R கான்செப்ட் பைக் அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2016

ஹீரோ XF3R ஸ்டீரிட்ஃபைட்டர் பைக் கான்செப்ட் மாடல் ஆட்டோ எக்ஸ்போ 2016 அரங்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெர்ஃபாமென்ஸ் பைக் பிரிவில் நிலை நிறுத்தப்பட உள்ள எக்ஸ்எஃப்3ஆர் பைக் நேர்த்தியான டிசைன் தாத்பரியங்களை கொண்ட மாடலாக விளங்கும்.

 

XF3R கான்செப்ட் பைக்

Born to Wild என்ற டேக்லைனுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த கான்செப்ட் பைக் மாடலில் 350சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கலாம். இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம் பெற்றிருக்கும். காட்சிநிலை மாடலான XF3R பைக் உற்பத்திக்கு எப்பொழுது எடுத்துசெல்லப்படும் , என்ஜின் விபரம் போன்றவை வெளியிடப்படவில்லை.

நேர்த்தியான ஸ்டைலிங் அம்சங்களுடன் விளங்கும் XF3R கான்செப்ட் பைக் மாடலில் புகைப்போக்கி இருக்கையின் அடியில் மேல்நோக்கி கொடுக்கப்பட்டுள்ளது. எல்இடி பைலட் விளக்குகள் , மல்டிஸ்போக் அலாய் வீலினை கொண்டுள்ளது.

எதிர்கால வரவு என ஹீரோ  மோட்டோகார்ப் XF3R பைக் கான்செப்ட் மாடலை மையப்படுத்தியுள்ளது. மேலும் ஹீரோ எக்ஸ்டீரிம் 200S மாடலை காட்சிப்படுத்தியுள்ளது. எக்ஸ்டீரிம் 200எஸ் மாடல் அடுத்த வருடத்தில் விற்பனைக்கு வரும்.

 

 

Exit mobile version