ஹூண்டாய் ஐயோனிக் ஹைபிரிட் கார் அறிமுகம் – NAIAS 2016

0

ஹைபிரிட் கார் நுட்பத்தில் புதிய ஹூண்டாய் ஐயோனிக் கார் மாடலின் படங்கள் மற்றும் பவர்ட்ரெயின் விபரங்களை வெளியிடப்பட்டுள்ளது. ஐயோனிக் காரில் மூன்று விதமான வேரியண்ட்கள் வரவுள்ளது.

hyundai-ioniq-rear

Google News

ஹைபிரிட் , பிளக் இன் ஹைபிரிட் மற்றும் எலக்ட்ரிக் என மூன்று விதமான வேரியண்டில் ஐயோனிக் கார் இந்த வருடத்தின் இறுதியல் விற்பனைக்கு சர்வதேச அளவில் பல நாடுகளில் செல்ல உள்ளது.

மிகவும் இலகு எடையில் மிக வலுவான கட்டுமானத்தைகொண்டு வடிவைமைக்கப்பட்டுள்ள ஐயோனிக் காரில் 53 சதவீத அதிக வலுமிக்க உறுதியான நவீன ஸ்டீலில் இலகு எடை அலுமினியம் என இரண்டும் கலந்து உருவாகப்பட்டுள்ளது. பானெட் , டெயில்கேட் , முன் மற்றும் பீன் பீம் , முன் மற்றும் பின் வீல் , சஸ்பென்ஷன் போன்றவை இலகு எடை கொண்ட வலுமிக்க அலமினியத்தால் உருவாக்கப்பட்டுள்ள புதிய மாடல் ஸ்டீலுடன் ஓப்பிடுகையில் 12.6 கிலோ அதாவது 45 சதவீதம் வரை   எடை குறைக்கப்படிருந்தாலும் மோதலின் பொழுது மிக உறுதியை பெற்றிக்கும்.

hyundai-ioniq-hybrid-interior

ஹூண்டாய் ஐயோனிக் காரில் 1.6 லிட்டர் கப்பா என்ஜின் ஆற்றல் 103.3 bhp மற்றும் 146 Nm டார்க் வெளிப்படுத்தும் மேலும் இதில் பொருத்தப்பட்டுள்ள எலக்ட்ரிக் மோட்டார் 43bhp ஆற்றல் மற்றும் 169 Nm டார்க வெளிப்படுத்தும். இரண்டும் சேர்த்து 146.3Bhp மற்றும் 316 Nm டார்க்கினை வழங்கும்.

எலக்ட்ரிக் மோட்டார் பற்றி விபரங்கள் இன்று தொடங்கவுள்ள டெட்ராய்ட் மோட்டார் ஷோவில் ஐயோனிக் கார் பார்வைக்கு வருகின்றது.

இணைந்திருங்கள்….

ஹூண்டாய் ஐயோனிக் கார் படங்கள்

[envira-gallery id="5324"]