Site icon Automobile Tamilan

ஹூண்டாய் க்ரீட்டா எஸ்யூவி பேஸ்லிஃப்ட் அறிமுகம்

ஹூண்டாய் க்ரீட்டா எஸ்யூவி காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் சாவ் பாவ்லோ ஆட்டோ ஷோவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 2017 க்ரெட்டா எஸ்யூவி காரின் தோற்றம் மற்றும் உட்புறத்தில் சிறிய அளவிலான மாற்றங்களை பெற்றுள்ளது.

முகப்பு தோற்ற அமைப்பில் முன்பக்க பம்பரில் மற்றும் கிரில் தோற்றத்தில் மூன்று ஸ்லாட்களை பெற்றுள்ளது.  ஹெட்லைட்டில் சிறிய மாற்றங்களுடன் பகல் நேர ரன்னிங் எல்இடி விளக்குகள் இனைத்து பெற்றுள்ளது. கிடைமட்ட பனி விளக்குகளை பெற்றுள்ளது. பின்புற தோற்ற அமைப்பில் டெயில் விளக்கு மற்றும் பின்புற பம்பரில் சில மாற்றங்களை பெற்றுள்ளது. உட்புறத்தில் டேஸ்போர்டில் சில மாற்றங்களுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆண்ட்ராய்ட் ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே வசதிகளை பெற்றதாக விளங்கும்.

பிரேசில் நாட்டில் இரு- எரிபொருளை பயன்படுத்தும் வகையிலான எஞ்சினை பெற்று விளங்குகின்றது. அதாவது பெட்ரோல் மற்றும் எத்தனால் எரிபொருளில் இயங்கும். 1.6 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 130 பிஹெச்பி ஆற்றல் வெளிப்படுத்தும். இதில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்  இடம்பெற்றுள்ளது மற்றும் 2.0 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 166பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். இதில்  ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் 2017 ஹூண்டாய் க்ரீட்டா பிரேசில் சந்தையில் விற்பனைக்கு செல்ல உள்ளது. இந்தியாவில் அடுத்த வருடத்தின் இறுதியில் விற்பனைக்கு வரவுள்ளது. அடுத்த தலைமுறை 2021 ஆம் ஆண்டில் 7 இருக்கைகளை கொண்ட ஹூண்டாய் க்ரெட்டா விற்பனைக்கு வரவுள்ளது.

 

Exit mobile version