Site icon Automobile Tamilan

ஹூண்டாய் க்ரீட்டா STC பிக்கப் கான்செப்ட் அறிமுகம்

பிரேசில் நாட்டில் நடைபெற்று வரும் சாவ் பாவ்லோ ஆட்டோ ஷோவில் ஹூண்டாய் க்ரீட்டா STC பிக்கப் கான்செப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. க்ரீட்டா எஸ்யூவி காரினை அடிப்படையாக கொண்ட மாடலாக க்ரெட்டா STC (Sport Truck Concept) காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

ஃபியட் டோரோ மற்றும் சமீபத்தில் வெளியான ரெனோ டஸ்ட்டர் ஆர்சோ பிக்கப் டிரக்கின் போட்டியாளராக விளங்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள மாடல் க்ரெட்டா எஸ்யூவி காரை விட 38 சென்டிமீட்டர் நீளத்தை கொண்டு 4.27 மீட்டர் பெற்றுள்ளது.

க்ரெட்டா எஸ்யூவி காரின் தோற்றத்தை அமைந்துள்ள பிக்கப் டிரக் மாடலில் ஹெட்லைட் உடன் கூடிய எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகளை பெற்றுள்ளது. கிடைமட்ட பனி விளக்கு மற்றும் நேர்த்தியான பம்பர் , ஸ்கிட் பிளேட் மற்றும் பின்புறத்தில் எல்இடி டெயில் விளக்கு மற்றும் டெயில்பைப் பெற்றுள்ளது.

பிரேசில் மற்றும் தென்கொரியா ஹூண்டாய் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவினால் க்ரெட்டா எஸ்டிசி கான்செப்ட் மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. எவ்விதமான எஞ்சின் ஆப்ஷன் மற்றும் நுட்ப விபரங்களை பற்றி எந்த தகவலும் வெளியிடவில்லை.

image source : carplace.uol.com.br

Exit mobile version