Automobile Tamil

ஹூண்டாய் N பெர்ஃபாமென்ஸ் பிராண்டு அறிமுகம்

ஹூண்டாய் என் என்ற பெயரில் புதிய பெர்ஃபாமென்ஸ் ரக பிராண்டை பிராங்பேர்ட் ஆட்டோ ஷோவில்  ஹூண்டாய் அறிமுகம் செய்துள்ளது. ஹூண்டாய் என் பிராண்டில் ஐ20 WRC  ராலி கார் , RM15 , N 2025 விஷன் கிரான் டூரிஷ்மோ மற்றும் N பாப்ஸ்லை போன்ற கான்செப்ட்கள் வந்துள்ளது.
N 2025 விஷன் கிரான் டூரிஷ்மோ
N 2025 விஷன் கிரான் டூரிஷ்மோ

மிக சிறப்பான பெர்ஃபாமென்ஸ் மற்றும் வேகத்தினை தரவல்ல மிகவும் இலகு எடை கொண்ட கார்களை என் பிராண்டில் ஹூண்டாய் அறிமுகம் செய்ய உள்ளது. ஆட்டோமொபைல் ரசிகர்களுக்கான மிக சிறப்பான ரேசிங் அனுபவத்தினை தரவல்லதாக இந்த என் பிராண்டு அமையும் என ஹூண்டாய் தலைவர் ஆல்பர்ட் பையர்மென்  தெரிவித்துள்ளார்.

 முதல் ஹூண்டாய் என் பிராண்ட் காராக ஐ20 டபிள்யூஆர்சி ராலி கார் வரும் ஜனவரி 2016ம் ஆண்டில் சந்தைக்கு வரலாம் என தெரிகின்றது. i20 WRC ராலி கார் அடுத்த தலைமுறை ஐ20 காரினை அடிப்படையாக கொண்டதாக விளங்கும்.

i20 WRC ராலி கார்

i20 WRC ராலி கார் மிக சிறப்பான செயல்திறனுடன் நவீன பாதுகாப்பு அம்சங்களை கொண்ட இலகுரக எடையுன் விளங்கும் மிகவும் நேர்த்தியான வடிவமைப்புடன் விளங்கும்.

RM15

ரேசிங் மிட்ஷிப் 15 எனப்படும் RM15 கான்செப்ட் காரின் பாடி பாகங்கள் அனைத்தும் கார்பன் ஃபைபரால் (Carbon Fiber Reinforced Polymer -CFRP ) உருவாக்கப்படுகின்றது. இதில் 297பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் என்ஜின் பொருத்தப்படலாம்.

ஹூண்டாய்  N பாப்ஸ்லை

ஹூண்டாய்  N பாப்ஸ்லை கான்செப்ட்  மாடலானது தென் கொரியா நாட்டின் பாப்ஸ்லை அணிக்காக உருவாக்கப்படுகின்றது. இதிலும் பாடி பேனல்கள் கார்பன் ஃபைபரால் உருவாக்கப்படுகின்றது.

உலகின் அதிகம் தயாரிக்கப்பட உள்ள முதல் ஹைட்ரஜன் ஃபயூவல் செல் கொண்டு உருவாக்கப்பட உள்ள N 2025 விஷன் ஜிடி காரின் ஆற்றல் 871எச்பி ஆகும். இதன் இரட்டை ஃப்யூவல் செல் வழியாக 670எச்பி மற்றும் சூக்கர் கேபாசிட்டர் வழியாக 210எச்பி கிடைக்கும்.

N 2025 விஷன் ஜிடி

i20 WRC ராலி கார்

Hyundai N performance brand launched at Frankfurt Auto Show

Exit mobile version