Site icon Automobile Tamil

ஹோண்டா WR-V க்ராஸ்ஓவர் கார் அறிமுகம்

பிரேசில் சவோ பவுலோ மோட்டார் ஷோ அரங்கில் ஹோண்டா WR-V க்ராஸ்ஓவர் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜாஸ் காரினை அடிப்படையாக கொண்ட க்ராஸ்ஓவர் ரக மாடலாக டபிள்யூஆர்-வி விளங்குகின்றது.

 

பிரேசில் ஹோண்டா ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவால் வடிவமைக்கபட்டுள்ள டபுள்யூஆர்-வி மாடல் மிக நேர்த்தியான ஸ்டைலிங் அம்சங்களை பெற்றதாக க்ராஸ்ஓவர் மற்றும் காம்பேக்ட் ரக தொடக்கநிலை எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக விளங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. WR-V என்றால் ‘Winsome Runabout Vehicle’ என்பது விளக்கமாகும்.

பிஆர்-வி காரில் உள்ளதை போன்ற ஹோண்டாவின் மிக அகலமான க்ரோம் பட்டைக்கு மத்தியில் அமைந்துள்ள ஹோண்டா லோகோ , முகப்பு விளக்கில் கருப்பு இன்ஷர்ட் , வட்ட வடிவ பனி விளக்கு போன்றவற்றை பெற்றுள்ளது. பக்கவாட்டில் உயரமான வீல் ஆர்ச் , பாடி கிளாடிங் , நேர்த்தியான அலாய் வீலை கொண்டுள்ளது.

 

பின்புறத்தில் வித்தியாசமான அமைப்பினை வெளிப்படுத்தும் வகையில் டெயில்கேட் விளக்குகளுக்கு கீழாக பின்புற பம்பருக்கு மேலாக நம்பர் பிளேட் அமைந்துள்ளது.

ஹோண்டா WR-V எஞ்சின்

இதில் 1.2 லிட்டர் i-VTEC பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனுடன் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் மற்றும் 1.5 லிட்டர்  i-DTEC டீசல் இன்ஜின் ஆப்ஷனில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றிருக்கும்.

ஃபியட் அர்பன் க்ராஸ், ஹூண்டாய் ஐ20 ஏக்டிவ் , டொயோட்டா எட்டியோஸ் க்ராஸ் மற்றும் வோக்ஸ்வேகன் க்ராஸ் மேலும் விட்டாரா பிரெஸ்ஸா , டியூவி300 , ஈக்கோஸ்போர்ட்  போன்ற மாடல்களுடன் ஹோண்டா WR-V சவாலாக அமையும். இந்தியாவில் மார்ச் 2017யில் விற்பனைக்கு வரவுள்ளது.

[foogallery id=”16161″]

 

 

 

Exit mobile version