ஃபோர்டு மஸ்டாங் மஸில் கார் வருகை – ஆட்டோ எக்ஸ்போ 2016

அமெரிக்காவின் ஐகானிக் காரான ஃபோர்டு மஸ்டாங் மஸில் ரக கார் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2016 கண்காட்சியில் பார்வை மற்றும் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஃபோர்டு மஸ்டாங்

ஃபோர்டு மஸ்டாங் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் பொழுது இந்தியாவின் முதலாவதாக விற்பனை வரும் அமெரிக்கன் மஸில் ரக மாடலாகும். வரும் பிப்ரவரி மாதம் டெல்லியில் நடைபெறவுள்ள ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் பார்வைக்கு வருகின்றது.

இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள மஸ்டாங் காரில் 2.3 லிட்டர் ஈக்கோபூஸ்ட் அல்லது 5.0 லிட்டர் வி8 இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். மேலும் 6 வேக மெனுவல் அல்லது 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

மஸ்டாங் ஈக்கோபூஸ்ட் வேரியண்டில் 310பிஹெச்பி ஆற்றல் மற்றும்ப 434என்எம் டார்க் வெளிப்படுத்தும் 2.3 லிட்டர் இகோபூஸ்ட் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கலாம்

அல்லது

மஸ்டாங் ஜிடி வேரியண்டில் 435பிஹெச்பி ஆற்றல் மற்றும்ப 542என்எம் டார்க் வெளிப்படுத்தும் 5.8 லிட்டர் வி8 என்ஜின் பொருத்தப்பட்டிருக்கலாம்.

2 கதவுகளை கொண்ட மிக சிறப்பான ஸ்போர்ட்டிவ் பெர்ஃபாமென்ஸை வெளிப்படுத்தக்கூடிய மஸில் ரக மஸ்டாங் கார் இந்தியாவில் மார்ச் மத்தியில் அதிகார்வப்பூர்வமாக முழுதும் வடிவமைக்கப்பட்ட மாடலாக விற்பனைக்கு வருகின்றது.

 

Exit mobile version