Home Auto News

பிஎம்டபிள்யூ ஸ்டன்ட் G310 கான்செப்ட் பைக் அறிமுகம்

பிஎம்டபிள்யூ கான்செப்ட் ஸ்டன்ட் G310 பைக் மாடலை பிஎம்டபிள்யூ டிவிஎஸ் கூட்டணி அறிமுகம் செய்துள்ளது. பிஎம்டபிள்யூ கான்செப்ட் ஸ்டன்ட் G310 மிக சிறப்பான ஸ்டன்ட் மாடல் பைக்காக விளங்கும்.
பிஎம்டபிள்யூ கான்செப்ட் ஸ்டன்ட் G310

சாலே டியூஸ் ரோடேஸ் பகுதியில் தென்அமெரிக்காவின் மிகப்பெரிய மோட்டார்சைக்கிள் கன்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிஎம்டபிள்யூ கான்செப்ட் ஸ்டன்ட் G310 பைக் மிக சிறப்பான ஸ்டன்ட் வடிவத்தில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும் ஸ்போர்ட்டிவ் மாடலாக விளங்கும்.

பிஎம்டபிள்யூ டிவிஎஸ் கான்செப்ட் ஸ்டன்ட் G310 பைக்கில் உள்ள என்ஜின் செங்குத்தான நிலையில் தலைகீழாக பொருத்தப்பட்டுள்ளது. இதன் சிறப்பு சிலின்டர் ஹேட் 180 கோண டிகிரி அளவில் திரும்பும் தன்மை கொண்டதாகும்.

குறைவான் வீல்பேஸ் கொண்ட மாடலாக விளங்கும் ஸ்டன்ட் G310 மாடல் மிக சுதந்திரமான ரைடிங் அனுபவத்தினை வழங்கும் . மேலும் ஸ்டன்ட் செய்யும்பொழுது மிக சிறப்பான நிலைப்பு தன்மையை வழங்கும்.

பிஎம்டபிள்யூ கான்செப்ட் ஸ்டன்ட் G310 பைக்கின் முன்பக்கத்தில் அப்வார்ட் டவுன் பிரென்ட் சஸ்பென்ஷன் பின்புறத்தில் மோனோ சாக் ரியர் சஸ்பென்ஷனை பெற்றிருக்கும். டிஸ்க் பிரேக் , 5 ஸ்போக் அலாய் வீல் , மெட்ஸிலர் டயர்களை பெற்றுள்ளது.

மிக சிறப்பான ஸ்டன்ட் ரைடிங் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஸ்போர்டிவ் காம்பேக்ட் ரக மாடலாகவும் சிறப்பான நிலைப்புதன்மை மற்றும் கட்டுபாட்டினை கொண்டிருக்கும் மாடலாக பிஎம்டபிள்யூ கான்செப்ட் ஸ்டன்ட் G310 பைக் விளங்கும் என 4 முறை உலக சாம்பியன் மற்றும் ஐரோப்பா ஸ்டன்ட் சாம்பியன் க்ரிஸ் பிஃபெய்ஃபர் தெரிவித்துள்ளார்.

கான்செப்ட் ஸ்டன்ட் G310 பைக்கில் 310சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கலாம்.  அடுத்த வருடத்தின் மத்தியில் இந்தியாவிற்க்கு பிஎம்டபிள்யூ டிவிஎஸ் கான்செப்ட் ஸ்டன்ட் G310 விற்பனைக்கு வரலாம்.

BMW TVS Concept Stunt G310 unveiled

Exit mobile version