Automobile Tamil

புதிய கியா ரியோ கார் அறிமுகம்

வருகின்ற பாரீஸ் மோட்டார் ஷோ அரங்கில் பார்வைக்கு வரவுள்ள 2017 கியா ரியோ காரின் படங்கள் மற்றும் தகவல்களை கியா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ளது. எலைட் ஐ20 காரின் அடிப்படையிலான மாடலாக கியா ரியோ விளங்குகின்றது.

2017-kia-rio-hatchback

தென் கொரியா ,ஜெர்மனி , அமெரிக்கா ஆகிய மூன்று கியா டிசைன் பிரிவுகளின் கூட்டணியில் உருவாக்கப்பட்டுள்ள நான்காவது தலைமுறை கியா ரியோ காரில் பல சிறப்பான மாறுதல்கள் மற்றும் கூடுதல் வசதிகளை பெற்றதாக விளங்கும்.

ரியோ காரின் நீளம் , அகலம் , வீல்பேஸ் அதிகரிக்கப்பட்டு உயரம் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது முந்தைய மாடலை விட 15 மிமீ நீளம் அதிகரிக்கப்பட்டு 4,065 மிமீ நீளமும் , 5 மிமீ அகலம் அதிகரிக்கப்பட்டு 1,725 மிமீ அகலமும் மற்றும் 5 மிமீ உயரம் குறைக்கப்பட்டு 1450 மிமீ உயரத்தினை பெற்றுள்ளது. கூடுதலாக 10மிமீ வீல்பேஸ் அதிகரிக்கப்பட்டு 2580 மிமீ பெற்று விளங்குகின்றது.

2017 கியா ரியோ காரின் தோற்ற அமைப்பில் முகப்பில் U வடிவ எல்இடி ரன்னிங் விளக்குளுடன் கூடிய புராஜெக்டர் முகப்பு விளக்கு , புதிய புலி மூக்கு போன்ற முன்பக்க கிரில் பின்புறத்தில் எல்இடி டெயில் விளக்குகள் போன்றவற்றை பெற்றுள்ளது.

இன்டிரியரில் புதுப்பிக்கப்பட்ட டேஸ்போர்டு , சென்ட்ரல் கன்சோல் , இருக்கைகள் , புதிய ஃபுளோட்டிங் ஹெச்எம்ஐ ( floating HMI – human-machine interface ) இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் என பல வசதிகளை பெற்றிருக்கும்.

எஞ்சின் விபரங்கள் மற்றும் பவர் போன்றவை வருகின்ற செப்டம்பர் 29ந் நேதி வெளியிடப்பட உள்ளது. பாரீஸ் மோட்டார் ஷோவில் பார்வைக்கு வருவதனை தொடர்ந்து உற்பத்திக்கு தயாராகும் ரியா கார் விற்பனைக்கு அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் ஐரோப்பா சந்தைகளில் கிடைக்கும்.

[foogallery id=”9766″]

Exit mobile version