Home Auto Show

புதிய ஜீப் எஸ்யூவி கார் நவம்பர் மாதம் அறிமுகம் – ஜீப் 551

ஜீப் நிறுவனத்தின் ஜீப் 551 ( C-SUV ) என்ற குறியீடு பெயரில் தயாரிக்கப்பட்டு வரும் புதிய ஜீப் எஸ்யூவி மாடல் வருகின்ற நவம்பர் மாதம் நடைபெற உள்ள சே பவுலோ மோட்டார் ஷோ-வில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Jeep-551-Jeep-C-SUV

மாதிரி படம் ; quatrorodas

விற்பனையில் உள்ள பாட்ரிட் மற்றும் காம்பஸ் போன்ற எஸ்யூவி மாடல்களுக்கு மாற்றாக ஜீப் 551 நிலைநிறுத்தப்பட உள்ளது. கிராண்ட் சேராக்கீ காரின் டிசைன் தாத்பரியங்களை அடிப்படையாக கொண்ட மாடலாக அமைந்திருக்கும். நவம்பரில் அறிமுகம் செய்யப்பட உள்ள 551 எஸ்யூவி மாடலில் 170 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கும். ஃபோர்டு என்டேவர் மற்றும் ஃபார்ச்சூனர் போன்ற எஸ்யூவிகளுக்கு கடுமையான சவாலினை ஏற்படுத்தும் மாடலாக விளங்கும்.

ஜீப் இந்தியா

கடந்த 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சி வாயிலாக இந்திய சந்தையில் ஃபியட் க்றைஸ்லர் குழுமத்தின் அங்கமான ஜீப் பிராண்ட் தன்னுடைய மூன்று எஸ்யூவி மாடல்களான ஜீப் ரேங்கலர் , ஜீப் கிராண்ட் செரோக்கீ மற்றும் ஜீப் கிராண்ட் செரோக்கீ SRT மாடல்களை காட்சிப்படுத்தியது. பிரசத்தி பெற்ற மூன்று எஸ்யூவி கார்களுமே மிக சிறப்பான பெர்ஃபாமென்ஸ் வெளிப்படுத்தக்கூடிய கம்பீரமான எஸ்யூவி கார்களாகும்.

முதற்கட்டமாக மூன்று எஸ்யுவிகளும் அடுத்த சில மாதங்களில் அதிகார்வப்பூர்வமாக விற்பனைக்கு வரவுள்ளது. தற்பொழுது உருவாக்கப்பட்டு வரும் ஜீப் 551 கார் இந்தியாவிலும் விற்பனைக்கு வரவுள்ளது. அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் விற்பனைக்கு வரவுள்ள இந்த எஸ்யூவி கார் ஃபியட் இராஞ்சாகாவுன் ஆலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இந்த ஆலை ஜீப் பிராண்டின் 4வது தொழிற்சாலையாகும். இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.

Exit mobile version