வரும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2016யில் மாருதி சுசூகி இக்னிஸ் , விட்டாரா ப்ரெஸ்ஸா  மற்றும் பலெனோ ஆர்எஸ் போன்ற மாடல்களை பார்வைக்கு கொண்டு வருவதனை மாருதி உறுதி செய்துள்ளது.

Maruti-Suzuki-Ignis

மாருதி இக்னிஸ்

டோக்கியோ ஆட்டோ கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட வந்த மாருதி இக்னிஸ் மாடல் இந்தியாவிலும் பார்வைக்கு வருகின்றது. காம்பேக்ட் ரக கார் சந்தையில் நிலை நிறுத்தப்பட உள்ள இக்னிஸ் மாடல் இந்த வருடத்தின் மத்தியில் இந்திய சந்தைக்கு வரவுள்ளது.

மிக சிறப்பான தோற்றத்துடன் கவர்ந்திழுக்கும் வகையில் ஜப்பானிய டிசைன் தாத்பரியத்தில் எஸ்யூவி கார்களுக்கு உரித்தான மாடலாக இக்னிஸ் அமைந்துள்ளது.

மாருதி பலேனோ RS

பலேனோ ஹேட்ச்பேக் காரின் ஸ்போர்ட்டிவ் வெர்ஷனாக வரவுள்ள பலேனோ ஆர்எஸ் மாடலில் கூடுதல் ஸ்டைலிங் அம்சங்களுக்காக சில  தோற்ற மாற்றங்களை பெற்றிருக்கும். இதில் 110bhp ஆற்றலை வழங்கும் 1.0 லிட்டர் பூஸ்டர் என்ஜின் மாடலாக இருக்கலாம். இந்திய சந்தைக்கு எப்பொழுதும் வரும் என்ற விபரங்கள் தெளிவாகவில்லை.

maruti-baleno

மாருதி விட்டாரா ப்ரெஸ்ஸா

விட்டாரா காரின் மினி எஸ்யூவி மாடலாக இந்தியாவில் உள்ள தொடக்கநிலை காம்பேக்ட் ரக கார்களுக்கு கடுமையான சவாலினை ஏற்படுத்தும் மாடலாக வரவுள்ள விட்டாரா ப்ரெஸ்ஸா டீசர் படத்தினை சமீபத்தில் மாருதி வெளியிட்டிருந்தது. இகோஸ்போர்ட் மற்றும் TUV300 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைய உள்ள ப்ரெஸ்ஸா காரில் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷனுடன் வரவுள்ளது. முதன்முறையாக வரும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியல் பார்வைக்கு வருகின்றது.

maruti-vitara-brezza-suv-sketch