Automobile Tamilan

மாருதி சுஸூகி இக்னிஸ் க்ராஸ்ஓவர் கான்செப்ட் அறிமுகம்

மாருதி சுஸூகி இக்னிஸ் க்ராஸ்ஓவர் எஸ்யூவி கான்செப்ட் மாடலை 44வது டோக்கியோ மோட்டார் ஷோவில் பார்வைக்கு கொண்டு வரவுள்ள நிலையில் சில முக்கிய விபரங்களை சுஸூகி மோட்டார்ஸ் வெளியிட்டுள்ளது.
மாருதி சுஸூகி இக்னிஸ்
மாருதி சுஸூகி இக்னிஸ்

44வது டோக்கியோ மோட்டார் ஷோ வரும் அக்டோபர் 30ந் தேதி முதல் நவம்பர் 8ந் தேதி வரை டோக்கியோவில் நடைபெற உள்ளது.  இதில் சுஸூகி , ஹோண்டா , டொயோட்டா போன்ற நிறுவனங்கள் புதிய கான்செப்ட் மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது.

ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் சுஸூகி ஐம்-4 என காட்சியளித்த க்ராஸ்ஓவர் ரக கான்செப்ட் மாடலின் உற்பத்தி நிலை மாடலை சுஸூகி இக்னிஸ் என்ற பெயரில் சுஸூகி மோட்டார்ஸ் காட்சிப்படுத்த உள்ளது. இந்த மாடல் இந்தியாவிலும் மாருதி சுஸூகி கூட்டணியில் வரவுள்ள 15 மாடல்களில் இதுவும் ஒன்றாக இருக்கும்.

கான்செப்ட் மாடலுக்கு இணையாகவே உற்பத்தி நிலை மாடலும் காட்சி தருவதனால் வாடிக்கையாளர்களின் மத்தியில் நல்ல வரவேற்பினை இக்னிஸ் பெறும். முகப்பில் எல்இடி புராஜெக்ட்ர் முகப்பு விளக்குகள் , பனி விளக்குகள் , மூன்று ஸ்லாட்களுக்கு பின்புறத்தில் தேன்கூடு கீரில் அதற்க்கு மேலாக சுஸூகி இலச்சினையை பெற்றுள்ளது. முகப்பில் ஜப்பான் கார்களின் பாரம்பரியத்தின் உந்துதலை பெற்றுள்ளது.

பக்கவாட்டில் மிக எடுப்பான வீல் ஆர்ச்சூகள் , 10 ஸ்போக்குகளை கொண்ட 18” அலாய் வீல் மற்றும் பின்புறத்திலும் எல்இடி விளக்குளை பெற்று விளங்குகின்றது.

உட்புறத்தில் பலேனோ காருக்கு இனையான இன்டிரியரை பெற்று விளங்குகின்றது. தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் , கிளாசிக் தோற்றத்திலான பொத்தான்களை கொண்டுள்ளது.

என்ஜின் பற்றிய விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை இந்திய சந்தைக்கு வரும் பொழுது 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் ஹைபிரிட் என்ஜின் ஆப்ஷனுடன் வரலாம். இக்னிஸ் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனை நிரந்தர அம்சமாக பெற்றிருக்கும். மேலும் இந்தியாவில் மாருதி நெக்ஸா டீலர்கள் வழியாக விற்பனை செய்யப்படலாம்.

Maruti Suzuki Ignis to showcase at Tokyo Motor Show 2015 

Exit mobile version