Automobile Tamilan

2016 ஆட்டோ எக்ஸ்போ – Auto Expo

2016 ஆட்டோ எக்ஸ்போ ( Auto Expo) டெல்லியில் உள்ள கிரேட்டர் நொய்டா-வில் வரும் பிப்ரவரி 5 முதல் 9 வரை நடைபெற உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோ எக்ஸ்போ மற்றும் உலகின் முக்கியமான வாகன கண்காட்சிகளில் ஒன்றான டெல்லி ஆட்டோ எக்ஸ்போ பற்றி தெரிந்து கொள்ளலாம்.

triumph-motorcycle

ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மற்றும் துறைச் சார்ந்த நிறுவனங்கள் என 65 பெரிய நிறுவனங்கள் இந்த கன்காட்சியில் இடம் பெற உள்ளது. மாபெரும் ஆட்டோ எக்ஸ்போவில் பல புதிய கார்கள் , பைக்குகள் , பேருந்து , டிரக் , வர்த்தக வாகனங்கள் , கான்செப்ட் மற்றும் நவீன தொழிநுட்பங்கள் பார்வைக்கு வரவுள்ளன.

சர்வதேச ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மற்றும் இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் என இந்த கண்காட்சியில் வரிசைகட்டி அறிமுகம் செய்ய உள்ளன. பங்கேற்க உள்ள ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மாருதி சுசூகி , ஹூண்டாய் , ஹோண்டா , மஹிந்திரா , டாடா , டொயோட்டா , ஃபோர்டு , ஃபோக்ஸ்வேகன் குழுமம் , செவர்லே , நிசான் , ரெனோ , ஃபியட் , டட்சன் போன்ற நிறுவனங்களுடன் சொகுசு கார் நிறுவனங்களான அபாரத் , ஆடி , பிஎம்டபிள்யூ , மெர்சிடிஸ் பென்ஸ் , ஜாகுவார் , லேண்ட்ரோவர் , ஜீப் மேலும் வர்த்தக வாகன நிறுவனங்கள் அசோக் லேலண்ட் , டாடா , வால்வோ ஐஷர் , மஹிந்திரா , போலரீஸ் , அட்டூல் ஆட்டோ , ஸ்கேனியா போன்ற நிறுவனங்களும் அடங்கும்.

இருசக்கர வாகனங்களில் ஹீரோ மோட்டோகார்ப் , ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் , யமஹா ,  டிவிஎஸ் , சுசூகி மோட்டார்சைக்கிள் , பியாஜியோ வாகனங்கள் , டிஎஸ்கே பெனெல்லி , பிஎம்டபிள்யூ மோட்டார்டு ,  ரிவோல்ட்டா , இந்தியன் மோட்டார்சைக்கிள் , யூஎம் மோட்டார்சைக்கிள் , ட்ரையம்ப் போன்ற நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. பஜாஜ் , ஹார்லி டேவிட்சன் , வால்வோ , ராயல் என்ஃபீல்டு போன்று நிறுவனங்கள் பங்கேற்கவில்லை.

புதிதாக  ஆட்டோ எக்ஸ்போ 2016 க்குள் நுழையும் நிறுவனங்கள் அபாரத் ,  ஜீப் , டிஎஸ்கே பெனெல்லி , பிஎம்டபிள்யூ மோட்டார்டு ,  ரிவோல்ட்டா , இந்தியன் மோட்டார்சைக்கிள் , யூஎம் மோட்டார்சைக்கிள் மேலும் சில..

இது தவிர ஆயில் , டயர் தயாரிப்பு நிறுவனங்கள் , ஆட்டோமொபைல் டிசைன் நிறுவனங்கள் , கல்லூரிகள் , பல்கழைகழகல்கள் , ஆட்டோமொபைல் மீடியாக்கள்  மற்றும் உயர்ரக மிதிவண்டிகளும் இந்த கண்காட்சியில் இடம்பெறுகின்றன.

மொத்தமாக 30க்கு மேற்பட்ட நாடுகளில் இருந்து பலதரப்பட்ட ஆட்டோமொபைல் துறைச் சார்ந்த நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.

2016 ஆட்டோ எக்ஸ்போ பரப்பளவு

டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2016 மோட்டார் கண்காட்சி நடைபெறும் இடத்தின் பரப்பளவு சுமார் 58 ஏக்கரில் 79,000 சதுர மீட்டர் அளவில் அமைந்துள்ளது. முந்தைய பதிப்பினை விட இந்த வருடத்தில் 32, 740 சதுரமீட்டர் ஆகும்.

நுழைவு சீட்டு

தற்பொழுது www.autoexpo-themotorshow.in மற்றும் www.bookmyshow.com என்ற இரு இணையதளங்கள் வாயிலாக டிக்கெட் விற்பனை நடந்துவருகின்றது.

பொது மக்கள் பார்வை கட்டனம் – ரூ.300 வாரநாட்களில் (1pm-6pm)

பொது மக்கள் பார்வை கட்டனம் – ரூ.400 வார இறுதி நாட்களில் (10am-7pm)

வர்த்தக நேர கட்டனம் – ரூ.650 வாரநாட்களில் (10am-1pm) பொது நேரத்திலும் பயன்படுத்தி கொள்ளலாம்.

இலவசமாக  நுழைவு சீட்டினை டெலிவரி பெற்றுக்கொள்ள 3 முதல் 10 டிக்கெட் வாங்க வேண்டும் இது டிசம்பர் 31 ,2015 வரை மட்டுமே . மற்றபடி டிக்கெட் டெலிவரி கட்டனம் ரூ.75 ஆகும். டிக்கெட் டெலிவரி பெற வேண்டுமெனில் இறுதி நாள் ஐனவரி 25, 2016க்குள் முன்பதிவு செய்ய வேண்டும். டிக்கெட் டெலிவரி ஜனவரி 15 முதல் தொடங்கும் அல்லது பார்க்கிங் லாட்டில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டாலில் பெற்று கொள்ள இயலும்.

வசதிகள்

உனவு முதல் அனைத்து விதமான வசதிகளும் ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் அமைந்திருக்கும். 2016 ஆட்டோ எக்ஸ்போ கன்காட்சியில் 6 லட்சம் பார்வையாளர்கள் பங்கேற்க வாய்ப்பு உள்ளது.

2016 Auto Expo manufacturers details and tickets

.

Exit mobile version