Automobile Tamil

புதிய லம்போர்கினி அவென்டேடார் S அறிமுகம்

மேம்படுத்தப்பட்ட புதிய லம்போர்கினி அவென்டேடார் S கூபே சூப்பர் ஸ்போர்ட்ஸ் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட 40 ஹெச்பி கூடுதலான பவரை அவென்டேடார் S  வெளிப்படுத்துகின்றது.

பிரசத்தி பெற்ற அவென்டேடார் காரின் மேம்படுத்தப்பட்ட மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள காரில் LP என பயன்படுத்துவதனை நீக்கிவிட்டு புதிதாக S என சேர்க்கப்பட்டுள்ளது.  அவென்டேடார் S  2017 ஆம் வருடத்தின் தொடக்கத்தில் டெலிவரி தொடங்கலாம். மேலும் இந்தியாவில் அடுத்த ஆண்டின் மத்தியில் புதிய லம்போர்கினி அவென்டேடார் S விற்பனைக்கு வரவுள்ளது.

அவென்டேடார் S எஞ்சின்

முந்தைய எஞ்சினை லம்போர்கினி அவென்டேடார் S பெற்றிருந்தாலும் 40 ஹெச்பி கூடுதலான பவரை வெளிப்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ள 6.5 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டு 740 ஹெச்பி பவர் , 690 நியூட்டன் மீட்டர்டார்க் வெளிப்படுத்தும். இதில் 7 வேக ஆட்டோ கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டு ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனை பெற்று விளங்குகின்றது.

0 முதல் 100 கிமீ வேகத்தை வெறும் 2.9 விநாடிகளில் எட்டிவிடும். அவென்டேடார் S அதிகபட்ச வேகம் மணிக்கு 350 கிலோ மீட்டர் ஆகும். முந்தைய ஸ்டெரடா ,ஸ்போர்ட் , கோர்ஸா மோட் டிரைவ்களுடன் கூடுதலாக இகோ மோட் சேர்க்கப்பட்டுள்ளது.

டிசைன்

தோற்ற அமைப்பில் சிறிய அளவிலான மாற்றங்களை பெற்றுள்ள அவென்டேடார் S மாடலில் 130 சதவீத டவுன்ஃபோர்ஸ் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் பின்புறத்தில் சிறிய அளவிலான டிசைன் மாற்றங்கள் செய்யப்பட்டு 50 சதவீத டவுன்ஃபோர்ஸ்மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும் டிராங் 400 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளதாக லம்போர்கினி தெரிவித்துள்ளது. உட்புறத்தில் மேம்படுத்தப்பட்ட டேஸ்போர்டு மற்றும் புதிய மேம்பாடுகள் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆப்பிள் கார் பிளே ஆதரவினை பெற்றுள்ளது.

முந்தைய கார்பன் ஃபைபர் மோனோக்கூ பாடியில் எவ்விதமான மாற்றங்களும் செய்யாமல் தொடர்ந்து 1575 கிலோ எடையை கொண்டுள்ளது.

வருகை

அடுத்த ஆண்டின் ஏப்ரல் மாதங்களில் சர்வதேச அளவில் விற்பனைக்கு செல்ல உள்ள  அவென்டேடார் S இந்தியவிலும் விற்பனைக்கு வரவுள்ளது.

2017 லம்போர்கினி அவென்டேடார் S படங்கள்

Exit mobile version