2018 ஃபோக்ஸ்வேகன் போலோ டீசர் படம் வெளியானது.!

0

வருகின்ற செப்டம்பர் 2017ல் நடைபெற உள்ள ஃபிராங்ஃபர்ட் மோட்டோ ஷோ அரங்கில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் ஆறாவது தலைமுறை 2018 ஃபோக்ஸ்வேகன் போலோ கார் வெளியிடப்பட உள்ளது.

2018 volkswagen polo teaser

Google News

2018 ஃபோக்ஸ்வேகன் போலோ கார்

1975 ஆம் ஆண்டு முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட ஃபோக்ஸ்வேகன் போலோ கார் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. தற்போது வரவுள்ள முற்றிலும் மேம்படுத்தப்பட்ட ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் MQB பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய போலோ கார் நவீன டிசைன் கோட்பாடுகளை பெற்றதாக விளங்கும்.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய  MQB பிளாட்ஃபாரத்தில் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட ஸ்கோடா கோடியாக் ,கோராக் , பஸாத் போன்ற கார்களுக்கு இணையான ஸ்டைலிஷ் தோற்றத்தை கொண்டதாக வரவுள்ளது. இதில் எல்இடி ஹெட்லேம்ப் அல்லது புராஜெக்ட்ர் முகப்பு விளக்குகள் பெற்று எல்இடி ரன்னிங் விளக்குகள் எல்இடி டெயில் விளக்குகள் போன்றவற்றை கொண்டதாக இருக்கும்.

இந்த ஆண்டின் இறுதியில் சர்வதேச அளவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய போலோ அடுத்த ஆண்டின் மத்தியில் இந்திய சந்தையிலும் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சமீபத்தில் இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் டிகுவான் எஸ்யூவி விற்பனைக்கு வெளியிடப்பட்டது குறிப்பிடதக்கதாகும்.