செப்., 12 முதல் 2019 ஃபிராங்ஃபர்ட் மோட்டார் ஷோ தொடக்கம்

mercedes benz eqs

2019 ஃபிராங்ஃபர்ட் மோட்டார் ஷோவில் பல்வேறு புதிய கான்செப்ட்கள், புதிய கார்கள் மற்றும்  மேம்படுத்தப்பட்ட மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும், இந்த கண்காட்சியில் பல்வேறு புதிய எலக்ட்ரிக் கார்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட உள்ளது.

இம்முறை  Internationale Automobil Ausstellung (IAA) முன்னணி மோட்டார் நிறுவனங்களில் 23க்கு மேற்பட்ட பிராண்டுகள் பங்கெடுக்கவில்லை. குறிப்பாக சுசூகி, டொயோட்டா, வால்வோ, ஜீப், ஃபியட், கிறைஸலர், ஃபெராரி, நிசான், மிட்ஷூபிசி, ரோல்ஸ் ராய்ஸ், ஆஸ்டன் மார்ட்டின், பியாஜியோ, சிட்ரோயன், சுப்ரோ மேலும் பல

பங்கேற்க உள்ள நிறுவனங்களில் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக எலக்ட்ரிக் வாகனங்கள் விளங்க உள்ளன. டெஸ்லா நிறுவனத்திற்கு மிகுந்த சவாலினை ஏற்படுத்த உள்ள போர்ஷே டேகேன் எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் செடான், ஹோண்டா E, லம்போர்கினி சியன் ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார், ரெட்ரோ ஸ்டைலை பெற உள்ள ஹூண்டாய் 45 EV, மெர்சிடிஸ் விஷன் EQS எலக்ட்ரிக் கார், பிஎம்டபபிள்யூ விஷன் M நெக்ஸ்ட் மற்றும் லேண்ட் ரோவர் டிஃபென்டர் போன்றவை முக்கியமாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்த ஆண்டு, சர்வதேச பத்திரிகையாளர் நாட்கள் செப்டம்பர் 10, மற்றும் செப்டம்பர் 11, 2019 நடைபெறுகின்றன. 2019 ஃபிராங்ஃபர்ட் மோட்டார் ஷோ செப்டம்பர் 12 வியாழக்கிழமை முதல் செப்டம்பர் 22, 2019 ஞாயிற்றுக்கிழமை வரை பொதுமக்களுக்கு திறக்கப்படுகின்றது.  மேலும் IAA தளத்தைப் பாருங்கள்.

Exit mobile version