2020 லேண்ட் ரோவர் டிஃபென்டர் எஸ்யூவி அறிமுகமானது

2019 பிராங்பர்ட் மோட்டார் ஷோவில் நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு பிறகு புதிய 2020 லேண்ட்ரோவர் டிஃபென்டர் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு விற்பனை நிறுத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் விற்பனைக்கு அடுத்த ஆண்டு தொடக்க முதல் 126 நாடுகளில் விற்பனைக்கு வரவுள்ள டிஃபென்டர் இந்திய சந்தையிலும் விற்பனைக்கு வெளியாக உள்ளது.

கம்பீரமான தோற்றத்துடன் ஸ்டைலிஷான வடிவமைப்பினை பெற்றுள்ள புதிய டிஃபென்டரில் முதற்கட்டமாக 5 கதவுகளை கொண்ட டிஃபென்டர் 110 மற்றும் சற்று கால தாமதமாக 3 கதவுகளை கொண்ட டிஃபென்டர் 90 என இரு மாடல்களும் விற்பனைக்கு பல்வேறு என்ஜின் ஆப்ஷன் மற்றும் எலக்ட்ரிக் ஆப்ஷனிலும் விற்பனைக்கு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.

புதிய லேண்ட் ரோவர் டிஃபென்டர்  D7x  ( ‘x’ standing for ‘extreme) எனப்படும் புதிய அலுமினிய தளத்தையும் அடிப்படையாகக் கொண்டு மோனோக்கூ கட்டுமானத்தை அடிப்படையாக பெற்றுள்ள இந்நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள மக கடினமான கடுமானத்தை பெற்ற எஸ்யூவியாக விளங்குகின்றது. டிஃபென்டரின் பாரம்பரியத்தை தொடர்ந்து பெற்றுள்ள புதிய மாடலில் சில தோற்ற உந்துதல்கள் முன்பாக 2011 ஆம் ஆண்டு காட்சிப்படுத்தப்பட்ட DC100 கான்செப்ட்டில் இருந்து பெறப்பட்டுள்ளது.

புதிய தலைமுறை லேண்ட் ரோவர் டிஃபெனடரில் ஐந்து கதவுகளுடன் நீண்ட வீல்பேஸ் 110 பதிப்பில் வழங்கப்படும், மேலும் ஐந்து, ஆறு அல்லது ஏழு இருக்கைகள் கொண்ட விருப்பங்களில் கிடைக்க உள்ளது. குறைந்த வீல்பேஸ் மூன்று கதவு 90 வேரியண்டில் இந்த ஆண்டின் இறுதிக்குள் கிடைக்கும், அதே நேரத்தில், ஒரு பெரிய 130 வேரியண்டும் அடுத்த ஆண்டு அறிமுகமாக திட்டமிடப்பட்டுள்ளது, இதிங் எட்டு இருக்கைகள் கொண்டதாக விளங்கலாம்.

உள்ளே, புதிய டிஃபென்டரும் வெளிப்படும் மெக்னீசியம் கிராஸ் பெற்ற சிறப்பான தோற்றத்தை வெளிப்படுத்துகின்றது. காரில் ஏறுபவர்களுக்கு கிராப் ஹேண்டில்கள் மற்றும். ஆஃப் ரோடிங்கின் போதும் இந்த ஹேண்டில் உதவுகின்றது. சிறப்பான வசதிகளை பெற்ற லேண்ட் ரோவரின் புதிய Pivi ப்ரோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பெற்று அனைத்து சிறந்த நவீன தொழில்நுட்ப வசதிளுடன் வருகிறது. 10 அங்குல தொடுதிரை காட்சி, ஸ்மார்ட்போன் ஆதரவுடன் ஒருங்கிணைப்புடன் கிடைக்கின்றது.  வழக்கமான ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே இணைப்பு ஆகியவற்றை கொண்டுள்ளது.

12.3 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் வழங்கப்பட்டு அனைத்து வேரியண்டிலும் கிடைப்பதுடன் ஓவர் தி ஏர் மேம்படுத்தல்களைப் பெற்றுள்ளது.

டிஃபென்டர் ஆரம்பத்தில் நான்கு மற்றும் ஆறு சிலிண்டர் டீசல் மற்றும் பெட்ரோல் என்ஜின்களுடன் அறிமுகம் செய்யப்படுகிறது. மேலும் இந்நிறுவனம் 2020 முதல் பிளக் இன் ஹைபிரிட் வேரியண்டை அறிமுகம் செய்ய உள்ளது. இது P400e என பெயரிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

பெட்ரோல் என்ஜின் பிரிவில் நான்கு சிலிண்டர் பெற்ற P300 மற்றும் ஆறு சிலிண்டர் பெற்ற P400 ஆகிய இரண்டு என்ஜினை பெற உள்ளது. 300 ஹெச்பி பவரை வழங்கும் P300 என்ஜின் 8.1 விநாடிகளில் 0-100 கிமீ வேகத்தை எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக P400 என்ஜின் 400hp பவரை வெளிப்படுத்துவதுடன் மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பத்தைப் பெற்றுள்ளது. இது 0-100kph தொடுவதற்கு 6.4 விநாடிகள் எடுத்துக் கொள்ளும்.

டீசல் மோட்டார்கள் நான்கு சிலிண்டர் பெற்று D200 மற்றும் D240 என அழைக்கப்படுகின்றது. 200hp பவரை D200 வெளிப்படுத்துவதுடன் 10.3 விநாடிகளில் 0-100 கிமீ வேகத்தை எட்டும் அடுத்து D240 என்ஜின் 240hp பவரை வழங்குவதுடன் 9.1 விநாடிகளில் 0-100 கிமீ வேகத்தை எட்டும். மேலும், இரு டீசல் என்ஜினும் 430Nm டார்க்கை வழங்கும்.

பொதுவாக ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனை பெற்றுள்ள லேண்ட் ரோவர் டிஃபென்டர் எஸ்யூவி காரில் அனைத்து வேரியண்டிலும் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. இந்தியாவில் அடுத்த ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வெளியாகலாம்.

Exit mobile version