3 புதிய பைக்குகள் களமிறக்கும் – ஹீரோ

0

ஹீரோ நிறுவனம் 3 புதிய சூப்பர் பெர்ஃபாமென்ஸ் பைக்குளை களமிறக்க திட்டமிட்டுள்ளது. 3 புதிய பைக்குகள் இன்ஜின் இத்தாலி என்ஜின்ஸ் என்ஜினியரிங் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கி வருகின்றது.

ஹீரோ-கரிஸ்மா-ZMR
ஹீரோ கரிஸ்மா ZMR

மஹிந்திரா & மஹிந்திரா குழுமத்தின் கீழ் செயல்படும் என்ஜின்ஸ் என்ஜினியரிங் நிறுவனத்துடன் இணைந்து AABA, AANF மற்றும் AAZA என்ற குறியிட்டு பெயரில் ஹீரோ மோட்டோகார்ப் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையால் உருவாக்கப்பட்டு வருகின்றதாம்.

Google News

இதே குறியிட்டு பெயரின் அடிப்படையில் மூன்று மோட்டார்சைக்கிள்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. 150சிசி முதல் 160சிசி வரையிலான பிரிவில் இரண்டு பைக்குகளும் , முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட புதிய கரிஸ்மா பைக்கும் ஒன்றாக இருக்கலாம்.

கடுமையான சவாலினை ஏற்படுத்தி வரும் 150 முதல் 160 சிசி வரையிலான பிரிவில் சிறப்பான பங்களிப்பினை பெறும் நோக்கிலும் யூனிகார்ன் 160 , டிவிஎஸ் அப்பாச்சி 160 , ஜிக்ஸெர் 150 , பல்சர் 150 , யமஹா FZ-S போன்ற பைக்குகளுக்கு மிகுந்த சவாலினை ஏற்ப்படுத்தும் வகையில் இரண்டு பைக்குகளை நிலை நிறுத்தப்பட உள்ளது.

பிரசத்தி பெற்ற கரிஸ்மா மாடலின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ள நிலையில் கரிஸ்மா பிராண்டுக்கு மாற்றாக புதிய பிராண்டினை 200சிசி என்ஜின் அடிப்படையில் உருவாக்கப்பட உள்ளது. இதன் மூலம் 200 முதல் 250சிசி வரையிலான என்ஜின் பைக்குகளுடன் மிக நேரடியாக போட்டியிடும் வகையில் இந்த மாடல் இருக்குமாம்.

3 புதிய பைக்குகள் பற்றிய முக்கிய விபரங்கள் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் வெளி வர வாய்ப்புகள் உள்ளது. இந்த பைக்குளின் விலை ரூ.90,000 முதல் 1.40 லட்சம் விலைக்குள் வரலாம்.

source