டெல்லி ஆட்டோ எக்ஸ்போ – 2018 தேதிகள் அறிவிப்பு

0

auto expo the motor show 2018தெற்காசியாவின் மிகப்பெரிய மோட்டார் கண்காட்சிகளில் ஒன்றான டெல்லி அருகே உள்ள கிரேட்டர் நொய்டா-வில் உள்ள இந்தியன் எக்ஸ்போ மார்ட் அரங்கில் ஆட்டோ எக்ஸ்போ 2018 கண்காட்சி பிப்ரவரி 9ந் தேதி முதல் பிப்ரவரி 14ந் தேதி வரை நடைபெற உள்ளது.

ஆட்டோ எக்ஸ்போ 2018

வருகின்ற 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8ந் தேதி முதல் 11ந் தேதி வரை புது டெல்லியில் உள்ள பிரகதி மெய்டன் அரங்கில் 14வது ஆட்டோ எக்ஸ்போ உதிரபாகங்களுக்கு கண்காட்சி நடைபெற உள்ளது.

அதனை தொடர்ந்து கிரேட்டர் நொய்டா-வில் இந்தியன் எக்ஸ்போ மார்ட் அரங்கில் ஆட்டோ எக்ஸ்போ – தி மோட்டார் ஷோ 2018 கண்காட்சி பிப்ரவரி 9ந் தேதி முதல் பிப்ரவரி 14ந் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் தவிர சர்வதேச அளவில் முன்னிலை வகிக்கும் மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்க உள்ள இந்த கண்காட்சியில் புதிய கான்செப்ட், வரவுள்ள புதிய கார் மற்றும் பைக்குகள் ஆகியவற்றை காட்சிப்படுத்த உள்ளன.

இந்நிலையில் வோல்ஸ்வேகன் குழுமத்தின் கீழ் செயல்படும் வோல்ஸ்வேகன், ஸ்கோடா, ஆடி உட்பட ஜிஎம், ஃபோர்டு ஆகிய 4 சக்கர வாகன தயாரிப்பாளர்களுடன் பஜாஜ், ராயல் என்ஃபீல்டு போன்ற இரு சக்கர வாகன நிறுவனங்களும் ஆட்டோ எக்ஸ்போ 2018 அரங்கில் பங்கேற்பதனை தவிர்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.