Site icon Automobile Tamil

EICMA 2016 : பிஎம்டபிள்யூ G310 GS பைக் அறிமுகம்

2016 மிலன் மோட்டார் ஷோ அரங்கில் பிஎம்டபிள்யூ மோட்டார்டு நிறுவனத்தின் பிஎம்டபிள்யூ G310 GS  அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜி310 ஆர் மாடலை அடிப்படையாக கொண்டதாக ஜி310 ஜிஎஸ் விளங்குகின்றது.

டிவிஎஸ் மற்றும் பிஎம்டபிள்யூ கூட்டணியில் உருவான நேக்டூ ஸ்போர்ட்டிவ் ரக மாடலான பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் பைக்கினை அடிப்படையாக கொண்ட அட்வென்ச்சர் மாடலிலும் அதே 34 பிஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 313சிசி ஒற்றை சிலிண்டர்எ லிக்யூடூ கூலிங் எஞ்சினை பெற்றுள்ளது.இதன் டார்க் 28 நியூட்டன்மீட்டர் ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பிடித்துள்ளது.

முன்பக்கத்தில் இடம்பெற்றுள்ள அப்-சைடு 41மிமீ ஃபோர்க் ஆனது ஜி310 ஆர் பைக்கை விட 49மிமீ கூடுதலாக பயணிக்கும் வகையில் அமைந்திருந்தாலும் அட்ஜெஸ்ட் செய்ய இயலாது. மேலும் பின்பக்கத்தில் மோனோசாக் அட்ஜெஸ்டபிள் அப்சார்பரை பெற்றுள்ளது. 5 ஸ்போக்குகளை கொண்ட வீல் 835மிமீ உயரம் கொண்ட இருக்கை மற்றும் 169.5 கிலோகிராம் எடையை கொண்டுள்ளது.

வளர்ந்து வரும் சந்தைகளுக்கு ஏற்ற சிறிய ரக எஞ்சினை கொண்டுள்ள அட்வென்ச்சர் டூரிங் ஜி310 ஜிஎஸ் மாடலில் பல்வேறு விதமான நவீன நுட்பங்களை பெற்றுள்ளது. குறிப்பாக ஏபிஎஸ் நிரந்தர அம்சமாக , எல்சிடி டிஜிட்டல் கிளஸ்ட்டர் மேலும் 12V சாக்கெட் , ஹீட்டேட் கிரிப்ஸ் , லக்கேஜ் கிட்ஸ் , ஸ்மார்ட்போன் ஆதரவு , செயற்கைகோள் தொடர்பு நெவிகேஷன் என பலதரப்பட்ட கூடுதல் துனை கருவிகள் அதிகார்வப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ மோட்டார்டு ஜெர்மனியில் வடிவமைக்கப்பட்டுள்ள பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் மாடல் ஓசூரில் உள்ள டிவிஎஸ்தொழிற்சாலையில் தயாரிக்கப்பட உள்ளது. பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் மாடல் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு வரவுள்ளது.

பிஎம்டபிள்யூ G310 GS படங்கள்

Exit mobile version