Automobile Tamilan

EICMA 2016 : 2017 கேடிஎம் 390 டியூக் பைக் அறிமுகம்

இத்தாலியில் நடைபெறும் இசிஏம்ஏ 2016 (EICMA 2016) அரங்கில் 2017 கேடிஎம் 390 டியூக் பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மிகவும் ஸ்டைலிசான அம்சங்களுடன் பல நவீன வசதிகளை பெற்றதாக கேடிஎம் டியூக் 390 விளங்குகின்றது.

 

ஆஸ்திரியாவின் கேடிஎம் நிறுவனம் மிக சிறப்பான ஸ்போர்ட்டிவ் ரக பைக்குகளை தயாரிப்பதில் பிரசத்தி பெற்று விளங்குகின்றது. தங்களுடைய மாடல்களில் விற்பனையில் உள்ள நேக்டூ ஸ்போர்டிவ் மாடல்களில் மிகவும் முக்கியமான ஒன்றான கேடிஎம் டியூக் 390 பைக்கின் புதிய மாடலை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

மிகவும் ஆக்ரோஷமாக விளங்கும் முகப்பில் இரட்டை பிரிவுகளை முழு எல்இடி ஹெட்லேம்ப் பெற்றுள்ளது. மிக சிறப்பான ஸ்போர்ட்டிவ் பெட்ரோல் டேங்க் மற்றும் டிசைன் வடிவத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

 

புதிய 390 டியூக் பைக் மாடலில் யூரோ 4 மாசு விதிமுறைகளுக்கு ஏற்ற 44 பிஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 373சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 35 நியூட்டன்மீட்டர் வெளிப்படுத்தும். புதிய பைக்கில் டிஎஃப்டி திரை , டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டரில் ஸ்மார்ட்போன் ஆதரவு மற்றும் மைரைட் மல்டிமீடியா தொடர்பு , ரைட் பை வயர் டெக் ,சிலிப்பர் கிளட்ச் மற்றும் ஏபிஎஸ் நிரந்தர அம்சமாக பெற்று மேலும் பல்வேறு நவீன நுட்பங்களை பெற்றதாக விளங்குகின்றது.

பல்வேறு எலக்ட்ரானிக்ஸ் அம்சங்களுடன் டிரைவிங் மோட் , டபூள்யூபி ஃபோர்க் சஸ்பென்ஷன் , முன்புற டயரில் 320மிமீ பிரம்போ டிஸ்க் பிரேக் பெற்றுள்ளது. இந்தியாவில் கேடிஎம் 390 டியூக் அடுத்த வருடத்தின் மத்தியில் விற்பனைக்கு வரவுள்ளது.

 

Exit mobile version