அட்வென்ச்சர் ஹோண்டா X-ADV 150 ஸ்கூட்டர் அறிமுகம் – GIIAS 2019

0

honda x adv 150

இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் GIIAS மோட்டார் ஷோவில் ஹோண்டா X-ADV 150 ஸ்கூட்டர் எனப்படுகின்ற அட்வென்ச்சர் ரக ஸ்கூட்டர் மாடல் X-ADV 745சிசி மாடலை அடிப்படை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Google News

தொடக்க நிலை சந்தைக்கு ஏற்ற மாடலாக கெய்கிண்டோ இந்தோனேசியா சர்வதேச ஆட்டோ ஷோவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஹோண்டா எக்ஸ்-அட்வ் 150 மாடல் மிக ஸ்டைலிஷான மற்றும் முரட்டு தன்மையை வெளிப்படுத்தும் அட்வென்ச்சர் ரக மாடலாக விளங்குகின்றது.

இந்த அட்வென்ச்சர் ரக மாடலில் 149.3சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 14.2 bhp பவர் மற்றும் 13.8 Nm டார்க் வழங்குகிறது. இந்த ஸ்கூட்டரில் வி-மேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

honda adv150 giias 2019

இந்த மாடலின் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் ட்வின்-கேஸ் சார்ஜ் ஷோவா ஸ்ப்ரிங் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங் திறனில் சிபிஎஸ் அல்லது ஏபிஎஸ் உடன் கூடிய முன்புறம் 240 மிமீ பெட்டல் டிஸ்க், பின்புறம் 220 மிமீ டிஸ்க் வழங்கப்படுகிறது.

எல்இடி ஹெட்லைட் கொண்ட இந்த மாடலில் வழங்கப்பட்டுள்ள டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் மூலம் பேட்டரி, எரிபொருள் அளவு விவரம், சர்வீஸ் இன்டிகேட்டர், தேதி மற்றும் நேரம் உள்ளிட்ட விவரங்களை வழங்குவதுடன் ஸ்மார்ட்போனை சார்ஜிங் செய்ய சாக்கெட் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியா சந்தையில் வெளியிடப்பட உள்ள ஹோண்டா X-ADV 150 விலை 1.65 லட்சத்தில் தொடங்குகின்றது. இந்த ஸ்கூட்டர் இந்திய சந்தையில் வெளியிடப்படுவதற்கான எந்த அறிவிப்பும் இல்லை.
honda adv150 giias 2019 honda adv150 honda adv150